எனக்கு மக்கள் சேவை பிடிக்கும்.. அடுத்த 5 வருடம் ஆண்டவன் என்ன சொல்கிறானோ அதை செய்ய தயார் : ஆளுநர் தமிழிசை!

Author: Udayachandran RadhaKrishnan
2 December 2023, 9:17 pm

எனக்கு மக்கள் சேவை பிடிக்கும்.. அடுத்த 5 வருடம் ஆண்டவன் என்ன சொல்கிறானோ அதை செய்ய தயார் : ஆளுநர் தமிழிசை!

பகவான் ராம் சுரத்குமாரின் 105 ஆவது குருபூஜை விழாவில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பின்பு செய்தியாளர்களிடம் பேட்டியளித்த தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் ராம்சுரத்குமார் அவர்களின் அதிசயத்தை நான் நேரில் கண்டுள்ளேன். திருவண்ணாமலை என்பது ஆன்மீக பூமி என்றும் அரசியலிலும், சமுதாயத்திலும் எவ்வளவுதான் ஆன்மீகத்துக்கு எதிராக பேசினாலும் ஆன்மீகத்துக்கும் சனாதானத்திற்கும் ஒரு பதிலாக நடந்து முடிந்த திருக்கார்த்திகை தீபத் திருவிழா ஒன்றே சாட்சி என்றும், இதுதான் ஆன்மீகம் என்றும் தமிழகம் ஒரு ஆன்மீக பூமியின் என்பதை மறுபடியும், மறுபடியும் சனாதான எதிர்ப்பாளர்களுக்கு நிரூபித்து வருகிறது அதற்கு திருவண்ணாமலை ஒரு உதாரணம் என்றும், சனாதனத்தை எதிர்ப்பவர்கள் ஆன்மீகத்தை பற்றி தெரியவில்லை என்றும் தெரிந்து இருந்தால் அவர்கள் பேச மாட்டார்கள் என்றும் ஆன்மீகத்தை பற்றியும், அதிசயத்தை பற்றியும் அவர்கள் முழுமையாக உணர்ந்திருந்தால் சனாதனத்தை பற்றி பேச மாட்டார்கள் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

மேலும் சனாதனத்தை எதிர்ப்பவர்கள் அவர்கள் நாக்கில் இருந்து மட்டுமே பேசி வருகிறார்கள் உள்ளத்தில் இருந்து பேசவில்லை அதனால் தான் அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களே சனாதானத்தை கடைப்பிடிக்கிறார்கள் என்றும் சனாதனத்தை எதிர்த்து அவர்கள் பேஷனுக்காக மட்டுமே பேசி வருகிறார்கள் என்றும், இறைவனை தெரிய வேண்டுமென்றால் நமக்கு அந்த அறிவாற்றல் வேண்டும் என்றும், அவர்களுக்கு இறைவன் தெரியவில்லை என்றால் இறைவன் இல்லை என்ற பொருள் அல்ல என்றும் தமிழக மண்ணில் ஒவ்வொரு துகளிலும் ஆன்மிகம் உள்ளது என்றும் இல்லை என்று சொல்பவர்கள் அதை விரைவில் தெரிந்து கொள்வார்கள் என்றும் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி அளித்தார்.

திருவண்ணாமலையில் விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்டதை கண்டித்து நானும் எனது எதிர்ப்பை தெரிவித்தேன் என்றும், விவசாயிகள் மீது குண்டம் சட்டம் போட்டது மிக மிக தவறு என்றும் பல எதிர்ப்புகள் வந்த பின்பே தமிழக அரசு அதை திரும்ப பெற்றது என்றும் விவசாயிகளை தமிழக அரசு மதிக்க வேண்டும் என்றும் இந்த விஷயத்தில் நான் மிக மன வேதனை அடைந்தேன் என்றும் நான் ஆளுநராக தமிழகத்தை சேர்ந்தவர் என்பதனால் எனது கண்டனத்தை தெரிவித்தேன் என்றும், தெலுங்கானாவில் தமிழ் வழி பள்ளிகள் மூடப்படும் என்ற ஒரு கருத்து நிலவி வருவதாகவும் அப்படி மூடப்படும் என்றால் அதை எதிர்த்து முதலில் குரல் கொடுப்பவர் நானாக தான் இருப்பேன் என்றும், தமிழிசை இருக்கும் இடத்தில் தமிழுக்கு எதிராக எதுவும் வராது என்றும் புதிய கல்விக் கொள்கையில் தாய்மொழி இல்லை என்று சொல்கின்றார்கள் ஆனால் தாய்மொழி உள்ளது என்றும் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தை தமிழில் நாங்கள் புதுச்சேரியில் கொண்டு வந்தோம் என்றும், சிறப்பாக பேசக்கூடிய பிரதமராக மோடி அவர்கள் உள்ளார் என்றும், ஒவ்வொரு துகளிலும் ஆன்மிகம் இருக்கிறது என்றும் அதை எதிர்த்து பேசுபவர்கள் மிக விரைவில் அவர்களே உணர்ந்து கொண்டு மிக விரைவில் கோயிலுக்கு வருவார்கள் என்றும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

எனக்கு மக்கள் சேவை செய்ய விருப்பம் அதிகம் என்றும் தற்போது ஆளுநராக இந்த 5 ஆண்டுகள் மக்கள் சேவை செய்ய அனுமதித்துள்ளதாகவும் ஆண்டவன் அனுமதித்தால் அடுத்த ஐந்து வருடம் என்ன செய்ய சொல்கிறார்கள் என்று தெரியவரும் என்றும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

புதுச்சேரி முதலமைச்சரின் திட்டங்களுக்கு பாலமாகவும் பாசமாகவும் உள்ளேன் என்றும் நாங்கள் இருவரும் ஒன்றாக இருக்கின்றோம் என்பதினால் பலர் பல கருத்துக்களை கூறி வருகிறார்கள் என்றும் எங்கள் இரண்டு பேருக்கும் எந்தவித பிரச்சனையும் இல்லை என்றும் நாங்கள் அண்ணன் தங்கையாக புதுச்சேரியை வளர்ப்பதில் மிகச் சிறப்பாக செயலாற்றிக் கொண்டிருக்கிறோம் என்றும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

இதனை அடுத்து தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். அங்கு சிவாச்சாரியார்கள் கவர்னரை வரவேற்று ஊர்ல கும்பம் மரியாதை அளித்து சாமி தரிசனம் செய்து வைத்தார்கள்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…