ஓபிஎஸ் விரைவில் கொரோனாவில் இருந்து குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் : மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ட்வீட்!!

Author: Udayachandran RadhaKrishnan
16 July 2022, 10:07 pm

சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று சென்னை எம்ஜிஎம் மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

அதில், லேசான அறிகுறிகளுடன் ஓபிஎஸ் தனி வார்டில் சிகிச்சை பெறுகிறார். தற்போது ஓபிஎஸ்-யின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவர்கள் குழு அவரை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஓபிஎஸ்-க்கு கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் விரைந்து குணமடைய வேண்டும் என அரசியல் தலைவர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

அந்தவகையில், மத்திய இணையமைச்சர் எல் முருகன், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் முதல்வருமான பன்னீர்செல்வம் அவர்கள் கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்தேன். அவர் பூரண நலம் பெற்று பொதுப்பணியை முழு உத்வேகத்துடன் விரைவில் தொடர இறைவனை பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

  • actor sugumaran illegal relationship திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய காதல் பட நடிகர்…காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த துணை நடிகை..!
  • Views: - 677

    0

    0