கஜினி படத்தில் சூர்யாவுக்கு பதில் நான் தான் கமிட் ஆனேன் : ஆனால்…. வருத்தப்பட்ட பிரபல நடிகர்!!

Author: Udayachandran RadhaKrishnan
2 July 2022, 7:31 pm

தமிழ் மற்றும் பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகராக திகழ்ந்து வருபவர் சாக்லேட் பாய் மாதவன் தான். மாதவன், இவர் நடிப்பில் ஏகப்பட்ட ஹிட் திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.

மேலும் தற்போது நடிகர் மாதவன் நடித்து இயக்கியுள்ள திரைப்படம் ராகெட்ரி, நேற்று வெளியான இப்படம் சிறந்த விமர்சனங்களை பெற்று வசூலை குவித்து வருகிறது. உண்மை கதையை தழுவி எடுக்கப்பட்ட படம் என்பதால் ரசிகர்கள் வரவேற்பை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மாதவன் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் முலம் நடிகர் சூர்யாவிடம் உரையாடல் மேற்கொண்ட பொது சுவாரஸ்யமான விஷயத்தை கூறியுள்ளார். அதன்படி மாதவன் பேசுகையில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தன்னிடம் கஜினி கதையை சொன்னதாகவும், அப்படத்தின் இரண்டாம் பாதி பிடிக்காததால் அந்த கதை நிராகரித்தாராம்.

பின் சூர்யா கஜினி திரைப்படத்தில் தன்னை வருத்திக் கொண்டு நடித்தை பார்த்து அவர் வியந்ததாகவும் மாதவன் பேசியுள்ளார்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 971

    1

    2