அஜித்துடன் முதன்முதலாக ITEM பாடலுக்கு ஆடியது நான்தான் : பெருமை பேசும் பிரபல கவர்ச்சி நடிகை!!

Author: Udayachandran RadhaKrishnan
3 August 2022, 5:12 pm

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தில் இருப்பவர் நடிகர் அஜித். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழ் சினிமாவில் முக்கிய நட்சத்திரமாக இருக்கு அஜித், ஆரம்ப காலங்களில் தனது கடின உழைப்பால் பிரபல நடிகராக முன்னேறியவர்.

முதல் முதலாக கதாநாயகாக அஜித் நடித்த படம் அமராவதி. இந்த படத்தில் சின்ன பையனாக இருப்பார். இவருக்கு ஜோடியாக சங்கவி நடித்திருப்பார். காதல் காவியமாக உருவான இந்த படம் நல்ல விமர்சனங்களையே பெற்றது.

இந்த படத்தில் பாடல்கள் ரசிகர்களால் வரவேற்க்கப்பட்டது. அமராவதி படத்தில் உள்ள அடி சோக்கு சுந்தரி என்ற பாடலுக்கு நடிகை விசித்திரா நடனமாடியிருப்பார். விசித்திராவுக்கு தமிழில் அது 3வது படம் மட்டுமே.

அஜித்துடன் ஐட்டம் பாடலுக்கு முதன்முதலாக நான் தான் நடனமாடியுள்ளேன் என சமீபத்திய பேட்டியில் அவர் கூறியுள்ளார். அது மட்டுமல்ல, நடிகர் அஜித்தை விட நடிகை விசித்திரா 3 வயது குறைந்தவர் என்பது கூடுதல் தகவல்.

  • old madurai set work going on for parasakthi movie பழைய மதுரையை உண்மையில் உருவாக்கி வரும் சிவகார்த்திகேயன் படக்குழு? அடேங்கப்பா!