25 வருஷமாக முடிசூடா மன்னனாக இருந்தேன்… பாஜகவால் சொந்த தொகுதியில் தோற்றேன் : ஜெயக்குமார் வருத்தம்!!

Author: Udayachandran RadhaKrishnan
14 April 2024, 1:47 pm

25 வருஷமாக முடிசூடா மன்னனாக இருந்தேன்… பாஜகவால் சொந்த தொகுதியில் தோற்றேன் : ஜெயக்குமார் வருத்தம்!!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது, 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால்தான் நாங்கள் தோல்வி அடைந்தோம் என்று பாஜகவினர் கூறுகிறார்களே என்று செய்தியாளர் ஒருவர் கேட்க, அதற்கு ஜெயக்குமார் இவர்களுடன் கூட்டணி வைத்ததால் தான் எங்கள் ஆட்சியே பறிபோது என்றும், இல்லையென்றால் நாங்கள் வெற்றி பெற்று இருப்போம்.

நானெல்லாம் ராயபுரத்தில் தோற்கிற ஆளா? நான் இப்போது மனம் திறந்து சொல்கிறேன். 25 ஆண்டுகளாக முடிசூடா மன்னனாக இந்த ராயபுரத்தில் இருந்தேன். தோல்வி என்பதையே அறியாத ஆள் நான். பாஜகாவால் தான் தோற்றேன்.

பாஜக என்று ஒன்று இல்லை என்றால் நானெல்லாம் சட்டமன்றத்தில் இருந்திருப்பேன். எனது தொகுதியான ராயபுரத்தில் கிறிஸ்துவர், இஸ்லாமியர் என 40 ஆயிரம் சிறுபான்மையினர் ஓட்டுகள் இருந்தது.

என் மீது எனது தொகுதி மக்களுக்கு எந்தவித கோபமும் கிடையாது. அப்போதே என் தொகுதி மக்கள் கூறினார்கள் பாஜகவை கழட்டி விட்டுவிடுங்கள் என்று, நான் சொன்னேன் வேஸ்ட் லக்கேஜ் தான்.. வேறு என்ன செய்வது.. சமயம் வரும் போது கழட்டி விட்டுவிடுவோம் என்று கூறினோம் அதே போல் இப்போது கழட்டி விட்டுவிட்டோம்.

பாஜக வேஸ்ட் லக்கேஜ், அந்த பேட்டி இனிமேல் ஓடாத பேட்டி, ஓடாத வண்டி, பழைய மோட்டார் சைக்கில் என்று நினைத்து கழட்டி விட்டுவிட்டோம். பாஜக இல்லை என்றால் நாங்கள் தான் 40 தொகுதியிலும் வெற்றி பெற்றிருப்போம் என்பதை உறுதியாக கூறுகிறேன் என தெரிவித்தவார்.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!