உங்க மகனாக நான் எப்போதும் இருப்பேன்.. பூரணம் அம்மாளை நெகிழ வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்!

Author: Udayachandran RadhaKrishnan
29 January 2024, 7:49 pm

உங்க மகனாக நான் எப்போதும் இருப்பேன்.. பூரணம் அம்மாளை நெகிழ வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்!

தமிழ்நாடு அரசு பள்ளி கல்வி துறை சார்பில் நம்ம ஊரு,நம்ம ஸ்கூல் நிகழ்ச்சி மதுரை அழகர் கோவில் சாலையில் உள்ளது தனியார் விடுதியில் நடைபெற்றது.

இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டு அரசு பள்ளிகளுக்காக ஒன்றரை ஏக்கர் நிலத்தை அரசு பள்ளிக்கு தானமாக வழங்கிய மதுரை ஒத்தகடையை சேர்ந்த ஆயி என்ற பூரணம்மாள் மற்றும் 20 லட்சம் ரூபாயை பள்ளிக்கு கொடையாக வழங்கிய பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா, ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கிய வியாபாரி ராஜேந்திரன் ஆகியோருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் நினைவு பரிசு வழங்கி சிறப்பித்தது கௌரவப்படுத்தினார்.

இதனை தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியதாவது
மதுரையில் மேலும் எங்களுடைய பள்ளி சிறப்பு ஏற்படுத்தும் வகையில் இங்கு தமிழ், உழைப்பு, ஈகை அமர்ந்திருக்கிறது சாலமன் பாப்பையார், அப்பளம் வியாபாரி ராஜேந்திரன், ஆயி பூரணம் அம்மாள்.

“அம்மா உங்களுக்கு மகள் இல்லை என்று நினைக்காதீர்கள், மகனாக எப்பொழுதும் இந்த அன்பில் மகேஷ் பொய்யா மொழி இருப்பேன்.”

மாணவன் என்பவன் வகுப்பறையில் சென்று பெரும் மதிப்பெண்னை பொறுத்து அல்ல அவர்களின் திறமையை பொருத்து.

வேணு சீனிவாசன் 2500 கிராமங்களை தத்து எடுத்து இருக்கிறார்,எனது கிரமான அன்பில் கிராமத்தையும் அவர்தான் தத்த்து எடுக்கிறார்.வேணு சீனிவாசன் சிறு வயதில் தூரத்தில் நின்றும் போட்டோவிலும் பார்த்து இருக்கிறேன்.இன்று அவர் அருகில் இருப்பது எனது பாக்கியம்.

நம்ம school, நம்ம ஊரு பள்ளி திட்டத்திற்கு கொஞ்சம் கொஞ்சமாகவும் உதவ வேண்டும் என்று தெரிவித்தார்

  • before marriage priyanka was pregnant question raised by bayilvan ranganathan திருமணம் ஆகுறதுக்கு முன்னாடியே கர்ப்பம்; அப்பா யார்னு கேட்பாங்களே? விஜய் டிவி பிரியங்காவின் பகீர் பின்னணி