நான் எதுக்கு ஓடி, ஒளியணும்? 31ஆம் தேதி ஆஜராகுவேன் : வீடியோ வெளியிட்ட பிரஜ்வல் ரேவண்ணா!

Author: Udayachandran RadhaKrishnan
27 May 2024, 5:13 pm

கர்நாடகா, ஹாசன் தொகுதி ம.ஜ.த எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா மீது வீட்டு பணிப்பெண்கள் மற்றும் இன்னும் சில பெண்கள் பாலியல் புகார் கொடுத்து இருந்த நிலையில், அவர் தனது எம்பி பதவிக்கான டிப்ளமேடிக் (சிறப்பு) பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு தப்பி சென்றார் என கூறப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையை கர்நாடகாவின் சிறப்பு விசாரணை குழு விசாரணை செய்து வருகிறது. ஏற்கனவே 3 முறை சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராகததால் பிரஜ்வல் மீது புளு கார்னர் நோட்டீஸ் அனுப்பப்பட்டு சர்வதேச அளவில் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டார்.

இப்படியான சூழலில் தற்போது வீடியோ வெளியிட்டு தான் எங்கும் ஓடி ஒளியவில்லை என்றும், வரும் மே 31ஆம் தேதி நேரில் ஆஜராகுவதாகவும் பிரஜ்வல் வீடியோ வெளியிட்டு உறுதிபடுத்தியுள்ளார்.

மேலும் படிக்க: ஜெயலலிதா இருந்திருந்தால் ராமர் கோவிலில் வழிபட்டிருப்பார்.. கரசேவகர்களை ஆதரித்தவர் : அதிமுகவை சீண்டும் தமிழிசை!

தான் முன்பே திட்டமிருந்தபடிதான் வெளிநாடு வந்துள்ளேன். தற்போது தான் என்மீதான பாலியல் குற்றசாட்டுகளை பார்க்கிறேன். என்மீது அரசியல் கட்சியினர் அவதூறு பரப்புகின்றனர்.

இத்தனை நாட்கள் இதுகுறித்து விளக்கம் அளிக்காமல் இருந்தததற்கு கட்சியினருக்கும், பொதுமக்களிடமும் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!