அடுத்த கார் கமல்ஹாசன் கையில் வாங்குவேன்… மக்கள் நீதி மய்யம் பரிசளித்த காரை வாங்கிய ஓட்டுநர் ஷர்மிளா நெகிழ்ச்சி!

Author: Udayachandran RadhaKrishnan
23 August 2023, 6:43 pm

அடுத்த கார் கமல்ஹாசன் கையில் வாங்குவேன்… மக்கள் நீதி மய்யம் பரிசளித்த காரை வாங்கிய ஓட்டுநர் ஷர்மிளா நெகிழ்ச்சி!

கோவை தனியார் பேருந்து ஓட்டுனர் ஷர்மிளாவிற்கு கடந்த மாதம் சொகுசு கார் வழங்க இருப்பதாக நடிகர் கமலஹாசன் கூறிருந்த நிலையில் மக்கள் நீதி மயத்தின் மாநில பொதுச்செயலாளர் அருணாச்சலம் பிளமேட்டில் உள்ள மகேந்திர கார் ஷோரூமில் ஓட்டுனர் ஷர்மிளாவிற்கு மகேந்திர மராசோ காரினை பரிசாக வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மாநில பொதுச்செயலாளர் : தனியார் பேருந்து பெண் ஓட்டுனர் ஷர்மிளாவுக்கு ஒரு தொழில் முனைவராக மாற வேண்டும் என்று இந்த கார் பரிசாக வழங்கப்பட்டதாகவும் அடுத்த மூன்று வருடத்தில் பெரிய தொழில் முனைவராக வர வேண்டும் என்று கூறினார்.

கமல் பண்பாட்டு மையம் மூலமாக இந்த கார் பரிசளிக்கப்பட்டதாகவும் ஷர்மிளாவை கமலஹாசன் தனது மகள் போல் பார்த்துக் கொள்வார் என்று உறுதி அளித்துருப்பதாக கூறினார்.

திறமைமிக்கவர்களை கண்டுபிடித்து தேர்ந்தெடுத்து கமல் பண்பாட்டு மையம் மற்றும் மக்கள் நீதி மையம் சார்பாக Skill Development centre தமிழ்நாட்டில் வருவதாக ஆரம்பித்து அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் படி உள்ளதாக கூறினார்.

2024 மற்றும் 2026 தேர்தலுக்கு மக்கள் நீதி மையம் கட்சியினை கட்டமைத்துக் கொண்டிருப்பதாகவும் 234 தொகுதிகளுக்கு செயலாளர்கள் நியமித்து தொகுதியை கண்காணிக்க இருப்பதாக கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பெண் ஓட்டுனர் ஷர்மிளா,
தற்போது இந்த காருக்கு நான் ஓட்டுநர் மட்டுமே இன்னும் பல முயற்சிகளை எடுத்து வெற்றி பெற்று பின்னர் நான் முதலாளியாக மாறுவேன் என்று ஓட்டுநர் சர்மிளா கூறினார்.

கமலஹாசன் எனக்கு அப்பா போல் உதவி செய்துள்ளார். தொழிலில் வெற்றி பெற்று அடுத்த காரின் சாவியை நடிகர் கமல்ஹாசன் கையில் தான் வாங்குவேன் என்று உறுதியளித்தார்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்