பொறுமையும், அனுபவம் இருந்தால் மீண்டும் வருவேன் : திமுகவில் இருந்து விலகிய கவுன்சிலர்.. வெளியான ஆடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
8 March 2024, 8:39 am

பொறுமையும், அனுபவம் இருந்தால் மீண்டும் வருவேன் : திமுகவில் இருந்து விலகிய கவுன்சிலர்.. வெளியான ஆடியோ!

வேலூர் மாநகராட்சி 27-வது வார்டு தி.மு.க கவுன்சிலர் சதீஷ்குமார் என்பவர், தி.மு.க-வில் இருந்து திடீரென விலகிக்கொள்வதாக ஆடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதில், ‘‘அரசியலுக்கு வந்ததில் இருந்து தேவையில்லாத பிரச்னைகளும், தேவையில்லாத விமர்சனங்களும் என்னை நோக்கி வந்துக்கொண்டே இருக்கின்றன. நான் எதைச் செய்தாலும் ‘அது தவறு’ என்று சொல்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல், தேவையில்லாத விரோதமும் உருவாகிறது. எல்லோரும் ஒரு விஷயத்தை கேட்பார்கள். அதையே நான் கொஞ்சம் வேகமாக கேட்பேன். நான் நார்மலாக பேசுவதே அப்படித்தான். ஆனால், நான் கோபப்படுவதாக பலர் நினைக்கிறார்கள்.

இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொள்ள நினைக்கின்றேன். வேறு எந்தக் கட்சியிலும் போய் சேரமாட்டேன்.

எதிர்காலத்தில் பொறுமையும், அனுபவமும் வந்தால் அரசியலுக்கு வருகிறேன். கடைசி வரை பக்குவம் வராவிட்டால் அரசியலுக்கு வரவே மாட்டேன்.

இப்போதைக்கு மக்கள் பிரதிநிதியாக என் வார்டு பணிகளை மட்டுமே கவனிக்க விரும்புகிறேன். இது, எந்த சொந்த முடிவு’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி
  • Close menu