அமைச்சரை தூக்கி உள்ளே வெச்சுருவேன்… கேட்க ஆள் இல்லைனு சர்வாதிகாரம் பண்றாங்க : பொன்.மாணிக்கவேல் ஆவேசம்!!

Author: Udayachandran RadhaKrishnan
1 ஜனவரி 2024, 3:52 மணி
pon
Quick Share

அமைச்சரை தூக்கி உள்ளே வெச்சுருவேன்… கேட்க ஆள் இல்லைனா சர்வாதிகாரம் பண்றாங்க : பொன்.மாணிக்கவேல் ஆவேசம்!!

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், தமிழகத்தில் 12 ஆயிரம் அர்ச்சகர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கூட அறநிலையத்துறையால் கொடுக்க முடியவில்லை. 22 ஆயிரத்து 600 ஏக்கர் காலி இடங்களுக்கு கடந்த 8 மாதத்தில் மட்டும் வாடகை பாக்கி ரூ.151 கோடி வர வேண்டி உள்ளது. பழமையான தொன்மையான 5 ஆயிரம் கோவில்களை புதுப்பிப்பதாக திருப்பணி செய்ததாக கூறிவிட்டு, அதில் கமிஷன் அடிக்கிறார்கள்.

அறநிலையத் துறை அமைச்சர் உள்பட அனைவருக்கும் கோயில் வருமானங்கள் மூலம்தான் சம்பளம் வந்து கொண்டிருக்கிறது. அமைச்சரின் 2 உதவியாளர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் சம்பளமாம். என்ன சார் அநியாயம் இது.. கேட்பதற்கு ஆள் இல்லை என்பதற்காக அறநிலையத் துறையில் சர்வாதிகாரமாக செயல்படுகிறாங்க.
இதையெல்லாம் சொன்னால் நான் விளம்பரத்திற்காக செயல்படுவதாக குற்றம்சாட்டுறாங்க,.. விளம்பரத்திற்கு நான் அடிமை கிடையாது.
இன்னும் 15 வருடத்தில் 26 ஆயிரம் கோயில்களில் அர்ச்சகர்கள் இருக்க மாட்டார்கள்.

அர்ச்சகர்களை காப்பாற்ற சம்பளம் கொடுக்க வேண்டும். கோவில்களில் அனைத்தையும் செய்பவர்கள் அர்ச்சகர்கள். இவர்களை காப்பாற்றவில்லை என்றால் கோவில்கள் காலியாகிவிடும். அர்ச்சகர்கள் இல்லை என்றால் கோயில் சொத்துக்கள் சூறையாடப்படும்.

எந்த வேலையும் செய்யாத அதிகாரிகளுக்கு 40 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக சம்பளமாம். ஆனால், அனைத்து பணிகளையும் மேற்கொள்ளும் அர்ச்சகர்களுக்கு வெறும் 4500 ரூபாய்தான் சம்பளம் என்கிறார்கள்.

வசதி இல்லாத 1500 ஆண்டுகளுக்கு முன்பான 10 ஆயிரத்து 652 தொன்மையான கோவில்கள் அனைத்தும் கேட்பாரற்று உள்ளது. பொதுமக்களிடையே ஆன்மீகம் அதிகரித்தால் நாடு நன்றாக இருக்கும். இல்லையென்றால் சீரழிந்துவிடும்.

சைவ வைணவர்களின் ஒற்றுமை உடைந்துள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு மட்டும் அமெரிக்காவில் இருந்து 2 ஆயிர்து 622 சிலைகள் மீட்கப்பட்டிருக்கிறது. ஆனால் 2012-ம் ஆண்டு முன்பு ஏன் இந்தளவு சிலைகள் மீட்க முடியவில்லை. அமெரிக்க காவல்துறையுடன் சிலைகளை மீட்க ஒத்துழைக்க வேண்டும்.

இதற்கு மத்திய அரசுடன் பேசி மீதமுள்ள சிலைகளை மீட்க நடவடிக்கைவேண்டும். வெளி மாநிலங்களைச் சேர்ந்தோரை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் பணியில் அமர்த்தக்கூடாது. மிகவும் நேர்மையான அதிகாரிகளை பணியமர்த்த வேண்டிய துறையாக அறநிலையத்துறை உள்ளது.

ஆர்வம் குறைவான அதிகாரிகளை உயர் பதவிகளில் பணியமர்த்தப்பட்டதால் 2020 ல் இருந்து பல முக்கிய வேலைகளை நான் செய்யவில்லை. கடந்த மாதம் கோவில்களில் இருந்து ரூ.28.49 கோடி எடுத்துள்ளனர்.

நான் மட்டும் மீண்டும் அதே பொறுப்பில் அமர்த்தப்பட்டால் அறநிலையத் துறை அமைச்சர் உள்பட துறையில் உள்ள அனைத்து அதிகாரிகளையும் தூக்கி உள்ளே வைத்துவிடுவேன்.

அறநிலையத் துறை பற்றி பேசினால் நான் பாஜகவில் சேரப்போவதாகவும் பதவிகளைப் பெறப்போவதாகவும் சொல்கிறார்கள். நான் எந்தக் காலத்திலும் கட்சியில் சேரமாட்டேன். அப்படி சேர்ந்தால் என் சட்டைக் காலரை பிடித்து நீங்கள் கேள்வி தாராளமாக கேட்கலாம்” என பொன் மாணிக்கவேல் ஆவேசமாக பேசினார்.

  • KASTHURI மேடை முதல் மன்னிப்பு வரை.. கஸ்தூரி விவகாரத்தில் நடந்தது என்ன?
  • Views: - 333

    0

    0