அந்த நடிகையுடன் நடிக்க மாட்டேன் : இயக்குநர் பாலச்சந்தருக்கு கண்டிஷன் போட்ட நாகேஷ்!!
Author: Udayachandran RadhaKrishnan12 April 2022, 6:07 pm
தமிழ் சினிமாவின் சார்லி சாப்ளின், நகைச்சுவை நடிகர் நாகேஷ், ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருடைய நகைச்சுவை படங்களை இன்றளவும் மக்கள் ரசித்து வருகின்றனர்.

ஒரு காலக்கட்டத்தில் பிஸியாக இருந்த நடிகர் நாகேஷ். அவருடைய கால்ஷீட் வாங்க இயக்குநர்கள், தயாரிப்பாளர் நாகேஷ் வீட்டில் தவமாய் தவமிருந்தனர். ஒரு நாளில் 6 முதல் 7 படங்களில் நடித்து வந்தார்.

அவருக்கு இணையாக ஜோடி என்றால் மனோரமாவை தான் கூறுவார்கள். இருவரும் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளனர். இந்த நிலையில் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான நவகிரகம் படத்தில் நாகேசுக்கு ஜோடியாக மனோரமாவை ஒப்பந்தம் செய்தனர்.

இதை கேள்விப்பட்ட நாகேஷ் அவருடன் நடிக்க மாட்டேன் என பாலச்சந்தரிடம் கூறியுள்ளார். இதையடுத்து மனோரமாவின் கதாபாத்திரத்திக்கு பதில் நடிகை லட்சுமியை ஒப்பந்தம் செய்தனர்.
அதற்கு காரணம் நாகேஷ் குடும்பம் ஒரு பிரச்சனையில் சிக்கி கோர்ட்டு வரை சென்றது. அந்த சமயம் நாகேசுக்கு எதிராக சாட்சி கூறியவர் மனோரமா. இதனால் மனோரமாவுடன் நடிப்பதை அவர் தவிர்த்து வந்தார்.
மேலும் அந்த வழக்கை நாகேஷின் நண்பர் மற்றும் அப்போதைய முதலமைச்சர் எம்ஜிஆரால் முடித்துவைக்கப்பட்டது. இதன் பின்னர் கிட்டத்தட் 7 வருடம் கழித்து 23ம் புலிகேசி படத்தல் நாகேஷ் மனோரமா ஜோடியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.