ரவுடிகளுக்கே டஃப் கொடுக்கும் லேடி.. உன்னை கொல்லாமல் விடமாட்டேன் : காவலரை மிரட்டிய பெண் கைது!

Author: Udayachandran RadhaKrishnan
16 September 2024, 5:03 pm

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சமயபுரம் நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் நேற்று முன்தினம் மாலை போக்குவரத்து ஒழுங்கு பிரிவில் காவலர் அரசு பணியில் இருந்தார் .

நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் இருந்து நாமக்கல் ,சேலம் ,அரியலூர் ,போன்ற பல்வேறு பகுதிகளுக்கு வாகனங்கள் பிரிந்து செல்கின்ற மிக முக்கியமான இடமாகும் .

இச்சாலையில் நாள் ஒன்றுக்கு பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன .

அந்த வகையில் நேற்று சேலத்தில் இருந்து டால்மியாபுரம் நோக்கி சென்ற லாரி மீது எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனத்தின் சமையல் எரிவாயு டெலிவரி செய்யும் ஒருவர் மோதி இருசக்கர வாகன ஓட்டி நிலை தடுமாறி கீழே விழுந்தார் .

இதனைஅடுத்து அப்பகுதியில் பணியில் இருந்த காவலர் அரசு அவர்களை மீட்டு போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த பாலக்கரை பகுதியைச் சேர்ந்த கிரிஜா என்கின்ற பெண் காவலரிடம் நான் ஒரு செய்தியாளர் எனவும் நான் ஒரு வழக்கறிஞர் எனவும் உங்களால் என்ன செய்ய முடியும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மேலும் படிக்க: ராகுல் காந்தியின் நாக்கை அறுத்தால் ₹11 லட்சம் பரிசு.. பாஜக கூட்டணி எம்எல்ஏ சர்ச்சை அறிவிப்பு..!!

காவலரை தகாத வார்த்தைகளில் கடுமையாகத் திட்டியுள்ளார் . இச்சம்பவம் குறித்து காவலர் அரசு கொள்ளிடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் .

அப்புகாரில், பணியில் இருந்த என்னை பணியாற்ற விடாமல் தடுத்ததாகவும் தகாத வார்த்தைகளில் திட்டியதாகவும் அருகிலிருந்த பூக்கடையில் நிழலுக்காக அமைக்கப்பட்டிருந்த குடையை எடுத்து வைத்து என்னை தாக்க முற்பட்டதாகவும், மேலும் அந்தப் பெண் லாரி ஓட்டுநரை தாக்க முற்பட்டதாகவும் அதை தடுக்கச் சென்ற காவலரை உன்னை நான் காலி செய்யாமல் விடமாட்டேன் என மிரட்டியதாக புகார் அளித்தார் .

புகாரின் அடிப்படையில் கொள்ளிடம் போலீசார் அப்பெண் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர் . கிரிஜா என்பவர் கடந்த ஆண்டு காந்தி மார்க்கெட் காவல் நிலைய காவல் ஆய்வாளர் சுகுமார் மீது பாலியல் தொந்தரவு கொடுத்தார் என திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்து காந்தி மார்க்கெட் காவல் ஆய்வாளர் சுகுமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல்வேறு இடங்களில் சென்று நான் ஒரு பத்திரிக்கையாளர் எனவும் வழக்கறிஞர் எனவும் கூறி பல்வேறு இடங்களில் இப்பெண் பலருக்கும் தொந்தரவு கொடுத்த வருவதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது .

  • vetrimaaran give voice over for harish kalyan diesel movie ஹரிஷ் கல்யாண் படத்தில் வெற்றிமாறனின் இன்னொரு அவதாரம்? வேற லெவல்ல இருக்கப்போது…