ஜெயில்ல பசங்க என்ன குளிப்பாட்டியே விட்டாங்க.. மறுபடியும் பைக் ஓட்டுவேன் : டிடிஎஃப் வாசன் மீண்டும் சேட்டை!!

Author: Udayachandran RadhaKrishnan
3 November 2023, 7:29 pm

ஜெயில்ல பசங்க என்ன குளிப்பாட்டியே விட்டாங்க.. மறுபடியும் பைக் ஓட்டுவேன் : டிடிஎஃப் வாசன் மீண்டும் சேட்டை!!

டிடிஎஃப் வாசன் ஜாமீன் உறுதி பத்திரத்தை சிறை அதிகாரிகளிடம் அளித்து புழல் சிறையில் இருந்து டி டி எஃப் வாசனை அவரது தாய் வழக்கறிஞர்கள் உதவியுடன் ஜாமீனில் அழைத்துச் சென்றார்

பிரபல யூட்யூபர் டிடிஎஃப் வாசன் 48 நாளுக்கு பிறகு நேற்று முன்தினம் ஜாமின் வழங்கிய நிலையில் டிடிஎஃப் வாசனை அவரது தாயார் இன்று காஞ்சிபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் ஒன்றில் ஜாமின் ஒப்புதல் கடிதத்தை பெற்றுக் கொண்டு புழல் சிறைக்கு சென்று காவல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்து .

டிடிஎஃப் வாசனை சிறையில் இருந்து ஜாமீனில் அவரது வழக்கறிஞர்கள் உதவியுடன் அழைத்துச் சென்றனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய டிடிஎஃப் வாசன் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் கேட்டவுடன் இருசக்கர வாகனங்களை வாங்கி தராதீர்கள் என்றும் எல்லா நேரங்களிலும் இருசக்கர வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் அணியுங்கள் என்று இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

விழுந்து கையில் அடிப்பட்டது கூட பெரிய வலியாக தெரியவில்லை, லைசென்ஸ் ரத்து செய்ததுதான் கண்ணீர் வர வைத்தது. தொடர்ந்து பைக் ஓட்டுவேன், என்னிடம் சர்வதேச லைசென்ஸ் உள்ளது என கூறினார்.

  • Ajith viral interview இனியாவுது திருந்துங்க…ரசிகர்களை பார்த்து அஜித் கேட்ட நச் கேள்வி…வைரலாகும் வீடியோ..!