சுயநலத்துக்காக கட்சியை கூறுபோடுவதில் நீயா நானா போட்டி : அதிமுகவை நான் காப்பாற்றுவேன்.. மக்கள் மத்தியில் சசிகலா பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
8 July 2022, 12:45 pm

விழுப்புரம் : இரண்டாவது நாளாக புரட்சி பயணம் மேற்கொண்ட சசிகலா, திருச்சிற்றம்பலம் கூட்டு சாலையில் பயனத்தை தொடங்கினார். அங்கு தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் உரையாற்றினார்.

பெண் என்றும் பாராமல் சட்டசபையில் ஜெயலலிதாவின் சேலையை திமுக அமைச்சர்கள் கிழித்தார்கள், எத்தனையோ அரசியல் எதிரிகளுக்கு மத்தியில் துனிச்சலோடு போராடி வழக்குகளை எதிர்க்கொண்டு இரண்டான கழகத்தை இணைத்து நாட்டில் மூன்றாவது பெரிய கட்சியாக என்ற அந்தஸ்தை பெற்றோம்.

ஜெயலலிதாவுடனா என் நட்பு உண்மையானது, புனிதமானது. நாங்கள் இருவரும் சிந்தனையால், செயலால் வேறுபடாமால் ஒற்றுமையாக பயணித்தோம். அதனால் தான் அரசின் எதிரிகள் பொறாமைப்படும் அளவுக்கு அதிமுகவை கொண்டு வர முடிந்தது.

என்னை ஜெயலலிதாவிடமிருந்து பிரிக்க அரசியல் எதிரிகள் முயற்சி செய்தனர். அதன் மூலம் ஜெயலலிதாவை அரசியலில் இருந்து அப்புறப்படுத்தி, அதிமுகவை அழிக்க நினைத்தனர். ஆண்டவனோடும், மக்களுடன் கூட்டணி வைத்து வெற்றி பெற்ற அதிமுக இன்று கடும் சோதனைக்கு ஆளாகியுள்ளது.

தொடர் வெற்றிகளை மட்டுமே பார்த்த அதிமுக இன்று தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. தனிப்பட்ட சுயநலத்திற்காக கட்சியை கூறுபோடும் நிலை உருவாகிவிட்டது. இந்த நிலை மாற வேண்டும் என்றால் கட்சிக்கு வலிமையான, அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடய தலைமை வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

அதே நேரத்தில் அந்த தலைமை எம்.ஜி.ஆரின் சட்டவிதிகளுக்கு உட்பட்டு அடிமட்ட தொண்டர்களில் ஆதரவை பெற்ற தலைமையாகத்தால் இருக்க முடியும். அப்படிப்பட்ட தலைமையால் தான் பொது மக்களின் ஆதரவை பெற முடியும். அதன் மூலம் தான் அடுத்தடுத்த தேர்தலில் வெற்றி பெற முடியும்.


திமுகவை விமர்சிக்க தயங்குபவர்களால் அதிமுகவிற்கு நன்மை இல்லை. இன்றைக்கு தொண்டர்களின் கருத்துக்கு மதிப்பளிக்காமல் ஒரு சிலர் பேசிக்கொண்டு இருப்பதால் தொண்டர்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது.

நான் பெரியவன், நீ பெரியவன் என பதிவிக்காக சண்டை போடுவது அதிமுகவை அழிவு பாதைக்கு கொண்டு செல்லும். அதிமுகவில் 35 ஆண்டுகள் அரசியல் பயணம் மேற்கொண்டுள்ளேன் என்ற உரிமையிலும், தொண்டர்கள், கழக முன்னோடிளில் வேண்டுகோளுக்கு ஏற்று அரசியலுக்கு வந்துள்ளேன்.

மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வர எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் பாடுபடுவேன் என பேசினார். கிளியனூர் பகுதியில் பயனம் மேற்கொண்டு பொது மக்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் சசிக்கலா உரையாற்றினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா:- அதிமுகவின் சட்ட விதிகளின் படி அடிமட்ட தொண்டர்களுக்கு பொதுச்செயலாளராக உள்ளேன், எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பிறகு ஏற்பட்டது போலவே, ஜெயலலிதா மறைவிற்கு பிறகும் அதே நிலை ஏற்பட்டுள்ளது இதிலிருந்தும் அதிமுக மீண்டு வரும், அடுத்தது அதிமுக ஆட்சி தான் அமையும், அதனை நான் கொண்டு வருவேன்.

அதிமுகவில் மேல்மட்ட தலைவர்கள் தான் நீயா, நானா என போட்டி போடுகிறார்கள். ஆனால் தொண்டர்கள் அப்படியே தான் உள்ளனர். அதிமுகவின் எதிர்காலம் பாதிக்கப்பட நான் விடமாட்டேன் எனவும், மத்திய அரசு சிலிண்டர் விலை குறைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன், தமிழ்நாடு அரசு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் கொடுப்பதாக கூறினார்கள் அதனை உடனடியாக வழங்க வேண்டும்.

அதிமுகவை என் தலைமையில் மீட்டெடுத்தால் பிஜேபிக்கு ஆதரவளிப்பது குறித்த கேள்விக்கு தொண்டர்களின் கருத்து கேட்டு எதிர்காலத்திற்கு பாதிப்பு ஏற்படுவது போல் நான் விடமாட்டேன் எனவும், அதிமுக குறிப்பிட்ட சாதிக்கான கட்சியாக மாறினால் அது தவறானது, அது போல் கொண்டுபோக நினைக்கிறார்கள் அது நடக்காது, அதிமுக கட்சி எல்லோருக்கும் பொதுவானது எனவும் கட்சி அலுவலகம் செல்லும் காலம் விரைவில் வரும், கண்டிப்பாக செல்வேன் எனக் கூறினார்.

  • srinidhi shetty not able to act in ramayana movie because of yash பிரம்மாண்ட படத்தில் நடிக்க முடியாதபடி பண்ணிட்டாங்க? பிரபல ஹீரோவை கைகாட்டும் ஸ்ரீநிதி ஷெட்டி…