முதலமைச்சர் ஸ்டாலின் இடத்தில் நான் இருந்திருந்தால் அதை செய்திருப்பேன் : ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் கருத்து!
Author: Udayachandran RadhaKrishnan5 July 2023, 8:42 pm
கோவை விமான நிலையத்தில் ஜார்கண்ட் ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன் செய்தியாளகளை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பிரதமர் தமிழர்கள் மீதும், தமிழகம் மீதும் மகத்தான நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அதனால் தான் மூன்று தமிழர்கள் நான்கு மாநிலங்களில் கவர்னர்களாக இருக்கின்றனர்.
இது தனிப்பட்ட கட்சிக்கு கிடைத்த பெருமையாக கருதவில்லை. இது தமிழ் இனத்துக்கு கிடைத்த பெருமையாக கருதுகிறோம்.பொறுப்பேற்ற பின்னர் ஜார்கண்ட் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு , அந்த மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு முதல் முறையாக தமிழகத்திற்கு வருகை புரிந்திருக்கிறேன்.
தமிழக மக்கள் அனைவருக்கும் மகத்தான வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றேன். ஆளுநர்களின் செயல்பாடு மாநில அரசாங்கங்களின் செயல்பாடுகளை பொறுத்து அமைந்துள்ளது. ஆளுநர் என்பவர் ஏதோ அதிகாரம் செய்ய வந்ததாக கருதக்கூடாது. அவர் அரசியல் சட்டத்தின் படி மாநில அரசு செயல்படுவதை உறுதிபடுத்துகின்றார்
மணிப்பூரை பொறுத்தவரை ஒரு வழக்கு தீர்ப்பு வந்தது. அதில் இரு பிரிவுகளுக்கு இடையே பகை இருந்த நிலையில் அது மீண்டும் மேலே வந்திருக்கிறது. கலவரங்கள் நடைபெற்று வருகிறது. இப்பொழுது படிப்படியாக கலவரம் கட்டுப்படுத்தபட்டு வருகின்றது. கலவரத்தை கட்டுப்படுத்துவது எளிதாக இல்லை. அதை அரசியலாக்காமல் அமைதியை ஏற்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் குறிப்பிட்ட கிராமத்தில் குடிக்கும் தண்ணீரில் மலம் கலக்கப்பட்டுள்ளது. இதை அரசியலாக்காமல், குற்றவாளிகளை பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். யார் தவறு செய்தாலும் தவறு தவறுதான் முதல்வர் ஸ்டாலின் ஸ்தானத்தில் நான் இருந்திருந்தால், கண்டிப்பாக அமைச்சர் பாலாஜி அவர்களை நீங்கள் சிறிது காலம் பதவியில் இருந்து விலகி இருங்கள் என்று சொல்லி இருப்பேன்.
உங்கள் மீது சாட்டப்பட்டுள்ள குற்றம் நிரூபிக்கப்படாத வில்லை எனில் மீண்டும் இணைத்து கொள்கிறேன் என்று சொல்லி இருப்பேன். அப்படி நடப்பதுதான் சரியான அரசியல் நடத்துவதற்கு உதவும். இந்த வகையில் தான் இதை பார்க்க வேண்டும்.
தனி நபரின் மீது எடுக்கும் நடவடிக்கையாக பார்க்க கூடாது. பொது சிவில் சட்டம் என்பது இந்து சட்டமல்ல. அனைவருக்கும் பொதுவான சட்டம். இதை அனைவரும் ஆதரிக்க வேண்டும். இது சமுதாயத்தை ஒருப்படுத்தும்.வேக வேகமாக மாறி ஒரு பொருளாதாரமாக இந்திய பொருளாதாரம் இருக்கின்றது.
மேற்கு வங்கத்தில் முறையாக தேர்தல் நடைபெற்றதா? இதை எத்தனை முற்போக்குவாதிகள் கண்டித்து இருக்கிறார்கள். பெரியார் வாரிசுகள் என்று சொல்லி கொள்பவர்கள் முத்தலாக், பொது சிவில் சட்ட விவகாரங்களில் ஏன் அமைதி காக்கின்றனர்.
எதிர்க்கட்சிகளிடத்தில் ஒற்றுமையை ஏற்படுத்தக் கூடாது என்பது எங்கள் வேலையல்ல. அவர்கள் ஒற்றுமையை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர். அதிகாரத்திற்கான ஒற்றுமை கொள்வது வேறு, நாட்டு மக்களின் நன்மைக்காக ஒன்று சேருவது என்பது வேறு என ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேட்டி
0
0