திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா பால்கேணிமேட்டை சேந்தவர் நல்லம்மாள் சுப்பையா. இவர்களுடைய மகன் முருகன். ஏ.வெள்ளத்தைச் சேர்ந்த மரிய சிங்கராயர் தம்பதியினரின் மகள் பிரின்சி.
முருகனும் பிரின்சியும் ஐந்தாண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு டெல்விசா என்ற 2வயது பெண் குழந்தை உள்ளது.
இருவரும் அய்யலூர் வடமதுரை எரியோடு பகுதிகளில் சந்தையில் அருகே காய்கறி வியாபாரம் பார்த்து வருகிறார்கள். இந்த நிலையில் முருகன் அவர்களின் அக்கா வீட்டிற்கு சென்று பிரின்சி பேசிக் கொண்டிருந்தார்
அப்போது அவரது வீட்டிற்கு வந்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஈஸ்வரன் மனைவி மஞ்சுளா பேசி கொண்டிருந்த பிரின்சியிடம் மதமாற்றம் செய்கிறாய் என்று அவரது கணவரிடம் கூறி உள்ளார்
ஈஸ்வரன் முருகன் மற்றும் அவரது மனைவி பிரின்சீயையும் கடுமையாக தாக்கியுள்ளதாக கூறுகின்றனர். இதனை பார்த்து அழுது கொண்டிருந்த அவரது குழந்தை டெல்விசாவையும் பிளாஸ்டிக் பைபால் தலையில் அடித்ததாக தம்பதியினர் கூறுகின்றனர்.
மேலும் ஈஸ்வரன் என் மீது 15க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது பிரின்சியை நிர்வாணமாக வைத்து விடுவன் என்று மிரட்டியுள்ளார் ஈஸ்வரன் வீட்டில் வைத்திருந்த கத்தியை எடுத்து நாங்கள் குத்த வந்ததாக பொய் புகார் அளித்து உங்களது வீட்டை காலி செய்து விடுவேன் என்றும் மிரட்டி உள்ளார்.
இதுகுறித்து முருகனும் பிரின்சியும் வடமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஈஸ்வரன் தப்பிக் கொள்வதற்காக அவரது மனைவி மஞ்சுளாவை வைத்து மதமாற்றம் செய்ததாகவும் தன்னை தாக்கியதாகவும் புகார் அளித்ததாகவும் கூறுகின்றனர்.
உடனடியாக மாவட்ட ஆட்சியர் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குழந்தையுடன் தம்பதியினர் கண்ணீர் மல்க பேட்டி அளித்தனர்
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.