தமிழகம்

தலைவர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை… . மேலிடம் சொல்வதை செய்வேன் ; அண்ணாமலை அறிவிப்பு!

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பேசும்போது : இன்று நடைபெற்ற மருதமலை கும்பாபிஷேக விழா, இன்று மருதமலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு நடத்தப்பட்ட கும்பாபிஷேகமாக, அல்லது தி.மு.க காரர்கள் அவர்களுக்கே நடத்திக் கொண்ட மாநாடா என்பதை சந்தேகமாக இருக்கிறது.

இதையும் படியுங்க: 10 வயது சிறுமியை வீட்டுக்கு அழைத்து வந்த 50 வயது முதியவர்.. சிறிது நேரத்தில் கேட்ட அலறல் சத்தம்!

பக்தர்கள் அனைவரையும் நேற்று மாலையில் இருந்து படிக்கட்டின் வெளியே நிற்க வைத்து உள்ளார்கள். படி ஏற கூட அனுமதிக்கவில்லை. அமைச்சர் சேகர்பாபு வின் மனைவியையும் குழந்தையையும், போலீசின் escot போட்டு கோவிலுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

ஆனால் முருகப்பெருமானுக்கு சேவை செய்யக் கூடிய கோவை மக்களுக்கு ஒரு விபூதி கூட கொடுக்கவில்லை. 750 சிறப்பு தரிசன பாஸ் வழங்கப்படும் என கூறினர். ஆனால் அது அனைத்துமே கரை வேட்டி கட்டிய தி.மு.க காரர்களுக்கு கொடுக்கப்பட்டது.

உண்மையில் மருதமலையின் முருகனை அவமானப்படுத்தி இருக்கிறார்கள். உண்மையான பக்தர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. கும்பாபிஷேகம் எப்படி நடத்தப்பட வேண்டுமோ அதுபோல நடத்தப்படவில்லை.

அறநிலை துறை அமைச்சரின் மனைவியும் மகனும் கோயம்புத்தூருக்கு டூர் வந்துவிட்டு மருதமலை முருகனை எட்டிப் பார்த்ததைப் போல் வந்து சென்று உள்ளனர். இதனை பாரதிய ஜனதா கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

தமிழகத்தில் இதனால் தான் அறநிலையத் துறை இருக்கக் கூடாது என தொடர்ந்து வலியுறுத்துகிறோம். ஒரு முக்கியமான கோவிலின் கும்பாபிஷேகம் நடக்கிறது, மாவட்டத்தின் அமைச்சர் கூட இதில் கலந்து கொள்ளவில்லை.

ஏன் அவர்களெல்லாம் இதில் வந்து பங்கேற்க முடியாத? அங்கு மாவட்டத்தின் அமைச்சர் இருந்தால் மட்டும் தானே அந்த பிரச்சனைகளை சரி செய்ய முடியும். இந்த வெட்கம் கெட்ட செயலை பாரதிய ஜனதா கட்சி கடுமையாக கண்டிக்கிறது.

அதனால் அமைச்சர் சேகர்பாபு அவர்கள், இதே போல தான் திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலும் நடந்து கொண்டார். சேகர்பாபுவின் செயல் தொடர்ந்து அத்துமீறலில் இருக்கிறது. முருகன் இதை பார்த்துக் கொண்டிருக்கிறார் தக்க நேரத்தில் தண்டனை கொடுப்பார் என நம்புகிறோம் என கூறினார்.

பாரதிய ஜனதா கட்சியின் புதிய மாநில தலைவர் பற்றிய கேள்விக்கு,புதிய தலைவருக்கான தேர்தல் விரைவில் நடைபெறும், அதன் பிறகு பத்திரிகையாளர் சந்திப்பில் நான் விழா வரியாக பேசுகிறேன் எனக் கூறினார்.

தவெக wafq சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்துவோம் என நடத்தி இருக்கிறார்கள் என்ற கேள்விக்கு,போராட்டம் நடத்துவது தவறு கிடையாது, எந்த கட்சியாக இருந்தாலும் போராட்டம் செய்யலாம். நான் கேட்பது எதற்காக நீங்கள் போராட்டம் செய்தீர்கள் ?, அந்த சட்டத்தில் எந்த புள்ளி தவறு என நீங்கள் நினைக்கிறீர்கள்?, என்பதைத்தான் கேட்கிறோம்.

தமிழக வெற்றி கழகத்தினர், உங்களின் கருத்துக்களை லெட்டரில் கொடுத்தீர்களா?.. இதில் ஒரு கோடி பேர் சஜஷன் கொடுத்திருக்கிறார்கள், ஆனால் தவெ காவில் இருந்து ஒருவர் கூட எதுவும் கருத்து கூறவில்லை.

நீங்கள் கருத்து கூறி இருந்தால் நல்ல கருத்தாக இருந்து இருந்தால் நாங்கள் நிச்சயம் எடுத்து இருப்போம். எதுக்கு போராட்டம் செய்கிறோம் என்றே தெரியாமல் தமிழ்நாட்டில் ஒரு கட்சி இருக்கிறது. எந்த கட்சியாக இருந்தாலும் எதற்காக ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் என்று கூறிவிட்டு செய்யட்டும் என்று கூறினார்.

தொடர்ந்து பேசியவர், அரசியல் கட்சிகளுக்கு அவர்களின் நிலைப்பாடு இருக்க வேண்டும். நாங்கள் சட்டத்தை கொண்டு வந்து இருக்கிறோம், அதில் இருக்கும் சிறப்பு அம்சங்களை சொல்ல வேண்டியது எங்களுடைய கடமை.

13 திருத்தங்களை அனைத்து கட்சிகளும் கூறினார்கள் அதை நாங்கள் தெளிவாக செய்து கொடுத்து இருக்கிறோம். அதனால் இந்த சட்டம் நிறைவேற்றப்படுவதற்காக ஓட்டு போட்டவர்களுக்கு நாங்கள் தலை வணங்குகிறோம். ஓட்டு போடாதவர்கள் கூட வருகின்ற காலத்தில் தங்களுடைய மனதை மாற்றிக் கொள்வார்கள் என நம்புவதாக கூறினார்.

புதிய மாநில தலைவருக்கான போட்டியில் நீங்கள் இருக்கிறீர்களா என்று கேள்விக்கு,
புதிய மாநிலத் தலைவர் போட்டியில் நான் இல்லை எனக் கூறினார். பாரதிய ஜனதா நல்ல ஆத்மாக்கள் இருக்கக் கூடிய கட்சி என்னை பொறுத்த வரை கட்சி மென் மேலும் வளர வேண்டும் என்பது தான்.

நிறைய பேர் உயிரை கொடுத்து புண்ணியம் செய்து கட்சியை வளர்த்து இருக்கிறார்கள். அதனால் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் பொழுது நிறைய பேசுவோம் என கூறினார்.

இவர்கள் வைத்த நைட்டுக்கான கோரிக்கையை ஜனாதிபதி நிராகரித்து அனுப்பி விட்டார். நீங்கள் சொல்லி இருக்கக் கூடிய விஷயங்களையும் காரணங்களையும் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம், நீட் என்பது இந்திய மாணவர்களுக்கும் தமிழ்நாட்டுக் குழந்தைகளுக்கும் நல்லது என ஜனாதிபதி அதிகாரப்பூர்வமாக முதலமைச்சருக்கு கடிதம் எழுதி விட்டார்.

முதலமைச்சரின் நீட் நாடகம் அதிகாரப் பூர்வமாக முடிவுக்கு வந்துவிட்டது. இனி அடுத்து அவர் அடுத்த நாடகத்தை தொடங்கலாம். நான் நேரடியாகவே அவருக்கு சவால் விடுகிறேன் சுப்ரீம் கோர்ட்டுக்கே செல்லலாம்.

ஆனால் அவர்கள் சுப்ரீம் கோர்ட்டுக்கு மட்டும் செல்ல மாட்டார்கள், ஏனென்றால் நீட் வந்ததே அங்கிருந்துதான். உங்கள் தைரியம் இருந்தால் சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்லுங்கள் என்று கூறினார்.

மாநிலத் தலைவராக இருந்தபோது டி.எம்.கே பைல்ஸ் போன்றவற்றை வெளியிட்டீர்கள், மாநிலத் தலைவராக இல்லாவிட்டால் அடுத்து என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு,

மாநிலத் தலைவராக இல்லாவிட்டால் எனக்கு மரியாதை கொடுக்க மாட்டீர்களா, ஒரு விவசாயின் மகனாக இருப்பேன் என்னை மறந்து விடுவீர்களா ? எப்பொழுதுமே என்னுடைய பணி தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். ஊழலுக்கு எதிராக வந்தவன் நான். அதில் யாராக இருந்தாலும் சமரசனை கிடையாது.

ஒரு நாள் இல்லை என்றாலும் மற்றொரு நாள் தமிழகத்தில் நல்ல ஆட்சியை கொண்டு வருவதற்கான முயற்சி தொடரும் என கூறினார். 2026 தேர்தல் தமிழ்நாட்டிற்கும் மக்களுக்கு மிக முக்கியமான தேர்தல். நான் ஒரு தொண்டனாக கட்சி சொல்லும் பணியை செய்து விட்டு செல்வேன் என கூறினார்.

டாஸ்மாக் வழக்கு குறித்த கேள்விக்கு,தி.மு.க வின் அமைச்சரவையில் 13 பேரின் மேல், இன்று வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு தமிழ்நாடு நீதிமன்றங்களில் நடக்கிறது.

இந்த வழக்குகளை எல்லாம் பக்கத்து மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று முதலமைச்சர் கேட்கலாமே, ஆனால் இதையெல்லாம் எடுத்துவிட்டு டாஸ்மாக் வழக்கை மற்றும் மாற்றுச் சொல்கிறார். இதற்கு ஹை கோர்ட்டில் ஸ்டே வேண்டும் என கேட்டார்கள். ஹை கோர்ட்டின் அமர்வு மாறிய பிறகு, முதலமைச்சரின் தலைமையின் கீழ் இருக்கும் அமர்வு, ஐயையோ சுப்ரீம் கோர்ட்டுக்கு எல்லாம் சொல்ல வேண்டாம் பக்கத்து மாநிலத்திற்கு மாற்றுங்கள் எனக்கு கூறுகிறார்கள்.

13 அமைச்சர்கள் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு இருக்கிறது அதை பக்கத்து மாநிலத்திற்கு மாற்றுங்கள் எனக்கு கேளுங்கள் டாஸ்மாக்குக்காக நான் பக்கத்து மாநிலத்திற்கு மாற்றித் தர உங்களோடு சேர்ந்து கோரிக்கை வைக்கிறேன் என கூறினார்.

நீதிமன்றம் என்றால் நேர்மையாக நியாயமாக இருப்பார்கள் எனக் கூறும் நீங்கள், டாஸ்மாக் வழக்கிற்கு மட்டும் எதற்காக பக்கத்து மாநிலத்திற்கு செல்ல வேண்டும்.? உங்கள் மடியில் கனம் இருப்பதால் வழியில் பயம் இருக்கிறது, எதையோ மறைப்பதற்காக நீங்கள் இப்படி செய்து கொண்டு இருக்கிறீர்கள்.

அன்னைக்கு டாஸ்மார்க் ஆர்ப்பாட்டத்தில் நான் சொன்னது போன்ற கைதுகள் நிச்சயம் இருக்கும். எனக்கு ED மேல் நிறைய நம்பிக்கைகள் உள்ளது. நேர்மையான முறையில் தவறு செய்தவர்களை கைது செய்ய வேண்டும். மக்களின் வரிப்பணத்தை நேர்மையான முறையில் அரசாங்கத்திடம் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்று கூறினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

எரிச்சல் ஆகுது, படம் முழுவதும் Instagram Reelsதான்- GBU பார்த்து கொந்தளித்த ரசிகர்கள்…

வெளியானது GBU ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளிவந்துள்ள நிலையில்…

6 minutes ago

விஜய் பட வசனத்தை வைத்து அலறவிட்ட அஜித்.. GOOD BAD UGLY படத்தை கொண்டாடும் ரசிகர்கள்!!

அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது GOOD BAD UGLY திரைப்படம். மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த…

39 minutes ago

GBU படத்தால தூங்க கூட முடியல- பேட்டியில் வெளிப்படையாக புலம்பிய Darkkey

மாஸ் ஓப்பனிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகம் முழுவதும்…

57 minutes ago

GBU படம் பார்க்க மகளுடன் வந்த ஷாலினி.. வீடியோ வைரல்!

நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. விடாமுயற்சிக்கு பிறகு வெளியாகும் படம் என்பதால்…

1 hour ago

காதலனை திருமணம் செய்த மகள் கௌரவக் கொலை.. 6 மாத கருவை கலைத்து, சிறையில் தள்ளிய பெற்றோர்!

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் மிட்டபாளம் எஸ்.சி. காலனியைச் சேர்ந்த அஜய் என்ற இளைஞரை சந்திரகிரி மண்டலம் நரசிங்காபுரத்தை சேர்ந்த…

2 hours ago

நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…

ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…

17 hours ago

This website uses cookies.