பவுலர்களுக்கு விதிக்கப்பட்ட தடையை உடனே நீக்க வேண்டும்..ஐசிசி-க்கு முகமது ஷமி கோரிக்கை.!

Author: Selvan
6 March 2025, 4:04 pm

ரிவர்ஸ் ஸ்விங் சிக்கல்

சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி தனது அபாரமான பந்து வீச்சால் அனைவரையும் ஈர்த்து வருகிறார்.

இதையும் படியுங்க: அடடே! விரதம் இருந்த நயன்தாரா…கோலாகலமாக ஆரம்பித்த மூக்குத்தி அம்மன் 2 பட பூஜை.!

பாகிஸ்தானுக்கு எதிராக 5 விக்கெட்டுகள்,ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 விக்கெட்டுகள் வீழ்த்திய ஷமி, துபாயில் ரிவர்ஸ் ஸ்விங் செய்ய முடியாத நிலை குறித்து சமீபத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

துபாயின் வறண்ட மற்றும் வெப்பமான சூழல் பவுலர்களுக்கு ரிவர்ஸ் ஸ்விங் செய்ய ஏற்றதாக இருக்கும்.இருப்பினும், இந்த தொடரில் எந்த வீரரும் பெரிய அளவில் ரிவர்ஸ் ஸ்விங் செய்யவில்லை,இதற்கு முக்கிய காரணம் ஐசிசி விதிகள் என்று ஷமி தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில்,நாங்கள் ரிவர்ஸ் ஸ்விங் செய்ய முயற்சி செய்கிறோம். ஆனால் பந்தில் எச்சில் தடவ அனுமதி இல்லை,எச்சில் இல்லாமல் ரிவர்ஸ் ஸ்விங் செய்ய முடியாது,ஐசிசியிடம் இந்தத் தடையை நீக்குமாறு கோரிக்கைவைத்துள்ளோம்.இது இருந்தால் போட்டி இன்னும் விறுவிறுப்பாக மட்டுமின்றி பவுலர்களும் அதிக விக்கெட்களை எடுக்க முடியும் எனக் குறிப்பிட்டார்.

கொரோனா காலத்தில் வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் பந்தில் எச்சில் தடவுவது தடை செய்யப்பட்டது,தற்போது சூழல் கட்டுப்பாட்டில் உள்ளதால்,இந்த தடையை நீக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்,இது என்னுடைய தனிப்பட்ட கோரிக்கை மட்டுமல்ல ஒட்டுமொத்த வேகப்பந்து வீச்சாளர்களின் கோரிக்கை என தெரிவித்தார்.மேலும் இந்த தொடரில் பும்ரா இல்லாததால் எனக்கு பொறுப்பு அதிகமாக உள்ளது,இறுதிப்போட்டியில் என்னுடைய சிறப்பான பந்து வீச்சில் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்வேன் என கூறினார்.

  • Aadukalam movie casting controversy என்கூட நடிக்க மறுத்தார்..தனுஷ் செய்தது சரியா..வெளிப்படையாக பேசிய பார்த்திபன்.!
  • Leave a Reply