அதிமுக வென்றால் இன்னோவா கார், 5 சவரன் தங்கச் சங்கிலி : பரிசு அறிவித்த முன்னாள் அமைச்சர்!

Author: Udayachandran RadhaKrishnan
2 April 2024, 7:22 pm

அதிமுக வென்றால் இன்னோவா கார், 5 சவரன் தங்கச் சங்கிலி : பரிசு அறிவித்த முன்னாள் அமைச்சர்!

மக்களவை தேர்தலில் கடந்த முறை போல அல்லாமல் இந்த முறை எப்படியாவது அதிக தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்று அதிமுக தலைவர்கள் தீவிரமாக தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒருபக்கம் தீவிர பிரச்சாரம் செய்து வந்தாலும், மறுப்பக்கம், கட்சி நிர்வாகிகள் சோர்ந்து விட கூடாது என அதிரடி அறிவிப்புகளும் அதிமுக சார்பில் வெளியாகி உள்ளது.

அதிமுக சார்பில் திருச்சி மக்களவை தொகுதியில் P.கருப்பையா என்பவர் போட்டியிடுகிறார், இவரை ஆதரித்து திருச்சி தொகுதி அதிமுக நிர்வாகிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கட்சி நிர்வாகிகளுக்கு ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதாவது, திருச்சி மக்களவை தொகுதியில் அதிமுக வேட்பாளர் கருப்பையாவை வெற்றிபெற வைக்க வேண்டும். அப்போது அதிக வாக்குகள் பெற்று தரும் நகர செயலாளருக்கு இன்னோவா கார் பரிசாக வழங்கப்படும் என்றும், வட்ட செயலாளர்களுக்கு 5 பவுன் தங்க சங்கிலிபரிசாக வழங்கப்படும் எனவும் கட்சி நிர்வாகிகளிடம் கூறியதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

  • kamal haasan travel to america for film city ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?