அண்ணாமலை சொன்னா நடந்திடுமா.. இந்தியாவே கொதிச்சிருக்கு : அமைச்சர் பொன்முடி ரிப்ளை!

Author: Udayachandran RadhaKrishnan
19 July 2024, 11:48 am

விழுப்புரம் அருகே உள்ள வழுதரெட்டியில் முன்னாள் மறைந்த விவசாய துறை அமைச்சர் ஏ. ஜி. கோவிந்தசாமி மற்றும் இட இதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு 9 கோடியே 70 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் மணிமண்டப பணியை உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி மாவட்ட ஆட்சியர் பழனி நேரில் ஆய்வு செய்தார்கள்.

அதனை தொடர்ந்து பேட்டியளித்த உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி மணி மண்டபம் கட்டப்பட்டு வரும் பணிகள் முடிந்துவிட்ட தருவாயில் ஆகஸ்ட் 8 ஆம் தேதி மணிமண்டபத்தில் ஏஜி கோவிந்தசாமி சிலைகள் வைக்கபட்டு பிறகு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இந்த மணி மண்டபத்தை திறந்து வைப்பார்கள் என்றும் வரலாற்றை எடுத்து சொல்லும் வகையில் இந்த மணி மண்டபம் அமையும் என தெரிவித்தார்.

நீட் தேர்வு தேவை என அண்ணாமலை கூறுவது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் பொன்முடி. நீட் தேர்வு வேண்டும் என அண்ணாமலை கூறி வருகிறார். ஆனால் நீட் தேர்வு கூடாது என்று சொல்லுகிற பாட்டாளி மக்கள் கட்சி அவர்களுடன் தான் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தார்கள் என்றும் கொள்கை அடிப்படையில் இந்திய அளவில் ஸ்டாலின் தலைமையில் இருந்த அணிகள் நீட் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இப்போது இந்திய அளவில் நீட் தேர்வு எதிர்ப்பு வலுத்து வருவதாகவும்,நீட் மோசடி குறித்து உச்ச நீதிமன்றமும் அதனை கண்டித்திருப்பதால் நீட் தேர்வு மோசடிகள் இந்திய மக்கள் உள்ளங்களிலையே ஊறி இருப்பதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

  • srilankan tamizhans are negatively portrayed in retro movie said by bismi இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!