மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் 1 சவரன் தங்கம் ₹1 லட்சம் ஆகும் : திண்டுக்கல் சீனிவாசன் பரபர..!!!
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சுற்றுவட்டார பகுதியில் எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் முகமது முபாரக் ஆதரித்து முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் நத்தம்.விசுவநாதன் இரட்டை இலை சின்னத்திற்கு செவ்வாய்க்கிழமை தீவிர வாக்கு சேகரித்தனர்.
இந்தியாவில் முதற்கட்டமாக தமிழக முழுவதும் மக்களவை தேர்தல் இன்னும் 2 தினங்களில் நடைபெற உள்ளது. இந்நிலையில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று வாக்குகள் சேகரித்து வருகின்றனர்.
தங்களின் கூட்டணி வேட்பாளர்களுக்காக அரசியல் தலைவர்கள் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதையொட்டி திண்டுக்கல் மாவட்டம்,நத்தம் கிராமப்புற பகுதிகளான ஊராளிபட்டி,சிறுகுடி அவிச்சிப்பட்டி, அரவங்குறிச்சி, செந்துறை, மணக்காட்டூர், உள்ளிட்ட பகுதிகளில் சென்று அதிமுக கூட்டணியில் உள்ள எஸ்.டி.பி.ஐ கட்சியின் தலைவர் முகமது முபாரக்கு ஆதரவாக செவ்வாய்க்கிழமை முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் நத்தம் விசுவநாதன் ஆகியோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
அப்பொழுது சிறுகுடியில் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது : இந்தியாவில் 10 ஆண்டுகள் ஆண்ட பாரதிய ஜனதா கட்சி நாட்டு மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்றும், பெட்ரோல் டீசல், சமையல் எரிவாயு போன்ற அத்தியாவசிய பொருள்கள் விலை உயர்ந்துள்ளதாகவும் இவற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மேலும் படிக்க: GST பற்றி கமலுக்கு ஒண்ணுமே புரியல.. ஏதோ சினிமா வசனம் நினைச்சு பேசுறாரு : வானதி சீனிவாசன் அட்டாக்!
அதேபோல் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை படிப்படியாக உயர்ந்து வருவதாகவும் இனிமேல் நடுத்தர மக்கள் தங்கத்தை வாங்க முடியாது என்றும், அதற்காக வீட்டில் உள்ளவர்களுக்கு தங்கத்தின் பெயரில் தங்கராசு, தங்கம் என்று பெயர்தான் வைக்க முடியும் என்றும் மீண்டும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் ஒரு பவுன் தங்கத்தின் விலை 1 லட்சம் ரூபாயாக விலை உயர வாய்ப்புள்ளதாகவும் இவற்றை கட்டுப்படுத்த முடியாது என்றும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் தினந்தோறும் மக்களை காப்பாற்ற அதிமுக கூட்டணியான எஸ்.டிபி.ஐ கட்சியில் திண்டுக்கல் மக்களவை தொகுதிக்கு வேட்பாளராக போட்டியிடும் முகமது முபாரக் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று பேசினார் அவர். இதில் அதிமுக, எஸ்.டி.பி.ஐ, புதிய தமிழகம் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
டாப் தொகுப்பாளினி விஜய் தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக வலம் வருபவர்தான் பிரியங்கா தேஷ்பாண்டே.…
நீட் தேர்வை தமிழ்நாட்டில் கொண்டு வந்தது யார் என்ற விவாதம் இன்று சட்டபேரவையில் திமுக - அதிமுக இடையே காரசார…
அஜித்தும் கார் ரேஸும் அஜித்குமார் சினிமாவுக்கு நடிக்க வந்ததற்கு காரணமே அதில் வரும் பணத்தை வைத்து கார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்குத்தான்…
பிரியாங்காவுக்கு நடந்த 2வது திருமணம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் திருமணம் செய்த வசி சாச்சி குறித்து பல…
சச்சின் ரீரிலீஸ் விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்து மாஸ் ஹிட் அடித்த “சச்சின்” திரைப்படம் கடந்த 18…
90களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை சிம்ரன். இடையழகி என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட சிம்ரன், நடிப்பு திறமையால உச்சகட்ட நடிகையானார்.…
This website uses cookies.