தமிழ்நாடு மாநில சட்டப்பேரவை நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமாக தணிக்கை செய்யப்பட்டிருப்பது அவசரகாலத்தை நாட்டுக்கு நினைவூட்டுகிறது என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
சென்னை: இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டு உள்ள எக்ஸ் தளப் பதிவில், “இன்று தமிழ்நாடு மாநில சட்டப்பேரவை நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமாக தணிக்கை செய்யப்பட்டிருப்பது அவசரகாலத்தை நாட்டுக்கு நினைவூட்டுகிறது. மக்கள் குறிப்பாக தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகள் பேரவையின் உண்மையான நடவடிக்கைகள், அதில் உள்ள அவர்களின் பிரதிநிதிகளின் நடத்தை ஆகியவற்றை அறிவதில் இருந்து விலக்கப்பட்டனர்.
அதற்குப் பதிலாக மாநில அரசின் வெட்டப்பட்ட காட்சிகள் மட்டுமே வழங்கப்பட்டன. தேசிய கீதம் தொடர்பான அடிப்படைக் கடமையைப் புறக்கணித்ததன் மூலம் அரசியலமைப்பு அவமதிக்கப்பட்டது மட்டுமன்றி, அரசியலமைப்புச் சட்டம் உறுதிசெய்யப்பட்ட பத்திரிகை சுதந்திரத்தின் அடிப்படை உரிமையும் வெட்கக்கேடான முறையில் நசுக்கப்பட்டது. இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல” எனக் குறிப்பிட்டு உள்ளார்.
முன்னதாக, நடப்பாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று கூடியது. அப்போது தேசிய கீதம் இசைக்கக் கூறியும் இசைக்கப்படாததால், தேசிய கீதத்தை அவமதித்ததாகக் கூறி, ஆளுநர், அரசு தயார் செய்து கொடுத்த உரையை வாசிக்காமல், 3 நிமிடங்களிலேயே அவையை விட்டு வெளியேறினார்.
இதற்கான விளக்கத்தையும் ஆளுநர் மாளிகை அளித்திருந்தது. மேலும், “ஆளுநர் “தமிழ்த் தாய் வாழ்த்து” பாடலின் புனிதத்தை எப்போதும் நிலைநாட்டி, ஒவ்வொரு நிகழ்விலும் மரியாதையுடன் பாடி வருகிறார். பலமுறை முன்கூட்டியே இதற்கான நினைவூட்டல்களை தெரிவித்த பிறகும், இந்தக் கோரிக்கைகளை வேண்டுமென்றே தமிழ்நாடு சட்டப்பேரவை புறக்கணித்துள்ளது துரதிருஷ்டவசமானது.
ஆளுநர் உரையின் தொடக்கத்தில் தேசிய கீதம் பாடாமல் இருப்பது அல்லது இசைக்காமல் இருப்பது அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்தை அவமதிக்கும் செயலாகும்” எனத் தெரிவித்து இருந்தது. இதற்கு விசிக, பாமக, சிபிஐஎம் உள்ளிட்ட கட்சிகளும் எதிர்வினை ஆற்றி இருந்தன.
இதையும் படிங்க: பெண்ணின் உடையை கிழித்து தரதரவென இழுத்துச் சென்ற திருநங்கைகள்.. நெல்லையில் பயங்கரம்!
இதனிடையே, தமிழ்நாட்டில் அவசரகாலம் என ஆளுநர் குறிப்பிட்டு இருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே, திமுக உடன் கூட்டணியில் உள்ள சிபிஐஎம், அண்ணா பல்கலை வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து ஆர்ப்பட்டாம் நடத்தும் கட்சியினருக்கு அனுமதி மறுப்பு, கைது உள்ளிட்டவற்றைச் சுட்டிக்காட்டி, அவசரகால நிலை என்னும் பதத்தை பயன்படுத்தி இருந்தார்.
குறிப்பாக, “தமிழ்நாட்டில் என்ன அறிவிக்கப்படாத அவசர நிலையை பிரகடனப்படுத்திவிட்டீர்களா நீங்கள்? (முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்)” என முன்னாள் சிபிஐஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியிருந்தார். அப்போது, அவருக்கு என்ன நெருடல் இருக்கிறது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் திடீர் என விஜே பிரியங்கா பிரபல DJ வசி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் முக்கிய…
மனைவியிடம் கேட்ட சரத்குமார்? கடந்த 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் சரத்குமார் தனது சமத்துவ மக்கள் கட்சியை…
விஜய் டிவியில் பாப்புலரான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் பவித்ரா லட்சுமி. இவர் நாய் சேகர் உள்ளிட்ட…
பிக்பாஸ் ஜோடி பிரபல சின்னத்திரை நட்சத்திரமான பாவனி “பிக் பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டபோதுதான் முதன்முதலாக அமீரை…
இழப்பீடு கேட்ட இளையராஜா ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் ஆங்காங்கே பல காட்சிகளில்…
சேலத்தில் பாஜக மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, செந்தில் பாலாஜியின் செய்தியை திசை…
This website uses cookies.