அதிமுக ஆட்சிக்கு வந்தால் பெண்கள் அனைவருக்கும் உரிமைத் தொகை.. முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி அறிவிப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
17 February 2024, 8:18 pm

அதிமுக ஆட்சிக்கு வந்தால் பெண்கள் அனைவருக்கும் உரிமைத் தொகை.. முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி அறிவிப்பு!

கோவையில் தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட செல்வபுரத்தில் கோவை புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சரும் தொண்டாமுத்தூர் எம்எல்ஏவுமான எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டார்.

அதில் பேசிய எஸ்.பி.வேலுமணி, “பிரச்சாரத்தின் போது பெண்களுக்கும் உரிமை தொகை கொடுக்கப் போவதாகச் சொன்னார்கள். ஆனால், ஆட்சிக்கு வந்ததும் அப்படி எந்தவொரு திட்டத்தையும் அவர்கள் அறிவிக்கவே இல்லை.

அதன் பிறகு எடப்பாடி பழனிசாமி இது குறித்து சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அதன் பின்னரே உரிமை தொகை குறித்து அறிவித்தார்கள். இப்போதும் கூட அனைத்து பெண்களுக்கும் உரிமை தொகை கிடைக்கவில்லை. பாதிப் பேருக்கு தான உரிமை தொகையைக் கொடுத்துள்ளார்.

ஆனால், கவலை வேண்டாம் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வந்ததும் நிச்சயம் அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும். ஏற்கனவே உரிமை தொகை பெறுவோருக்கும் கிடைக்கும். பெறாதவர்களுக்கும் கிடைக்கும்.

மேலும், திமுக கூட்டத்திற்கு வரவில்லை என்றால் பணத்தை நிறுத்துவிடுவார்கள் என்றெல்லாம் மகளிர் உரிமைத் தொகை பெறும் பெண்களிடம் திமுகவினர் போய் சொல்வதாகக் கேள்விப்பட்டேன். அவர்கள் என்ன சொந்த பத்தையை எடுத்துத் தருகிறார்கள். அது அரசின் பணம். உங்களுக்குச் சேர வேண்டிய பணம் தான்.

மின்சார கட்டணம், சொத்து வரி என்று நீங்கள் செலுத்தும் பணத்தைத் தான் உரிமை தொகையாகத் தருகிறார்கள். எனவே, கூட்டத்திற்கு வரவில்லை என்பதால் எல்லாம் அந்த உரிமையைத் தொகையைத் தடுத்துவிட முடியாது. அப்படியே நிறுத்த முயன்றாலும் அதை நாங்கள் விட மாட்டோம்” என்று அவர் தெரிவித்தார்.

மேலும் அடுத்து வரும் தேர்தலில் பொதுமக்கள் திமுகவுக்கும் வாக்களிக்கக் கூடாது பாஜகவுக்கும் வாக்களிக்கக் கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!