தமிழ்நாட்டில் பிரதமர் போட்டியிட்டால் எதிர்த்து போட்டியிடுவேன் : அப்போதாவது என்னை நம்புவீர்களா? சீமான் பேச்சு!!
Author: Udayachandran RadhaKrishnan27 August 2023, 2:19 pm
தமிழ்நாட்டில் பிரதமர் போட்டியிட்டால் எதிர்த்து போட்டியிடுவேன் : அப்பவாவது என்னை நம்புவீர்களா? சீமான் பேச்சு!!
காயல்பட்டினத்தில் நடந்த வழக்கறிஞர் அபுபக்கர் அவர்களின் திருமண நிகழ்வில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.
அவர், நீங்கள் இன்றைக்கு என்னை நம்ப போவீர்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை மோடி தமிழ்நாட்டில் தேர்தலில் நின்றால் எனக்கு ஒரு விடிவுகாலம் வரும்.
ஏனென்றால் நான் அவரை எதிர்த்து போட்டியிடுவேன். அன்றைக்கு நம்புவீர்கள் என்று நினைக்கிறேன். உண்மையிலேயே இவர் சண்டை தான் போடுகிறார் என்று நினைப்பீர்கள் என்று கூறினார்.