கந்து வட்டி செலுத்தாதால் தாய், மகனை மரத்தில் கட்டிப் போட்டு அடித்து துன்புறுத்தல் : நள்ளிரவு வரை சித்ரவதை செய்த கொடூரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
2 November 2022, 10:36 am

நத்தம் அருகே கந்துவட்டி கொடுமை குடும்பத்துடன் ஊருக்கு வந்தையில் கட்டி வைத்து அடித்தவர் வழக்கில் ஒருவர் கைது இருவரை வலைவீசி தேடுகிறது போலீஸ்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சாத்தாம்பட்டியை சேர்ந்த ராமன்(வயது 52). தற்போது ஓட்டுனராக திருப்பூரில் பணியாற்றி வருகிறார். இவர் 2 வருடத்திற்கு முன் சாத்தாம்பாடி பகுதியை சேர்ந்த அம்பலம் மகன் ராஜேஷ்(35) என்பவரிடம் ரூ.1 லட்சம் கடன் பெற்றுள்ளார்.

மாத மாதம் வட்டி முறையாக செலுத்தி வந்த போதிலும் கொரோனா காலத்தில் வட்டி செலுத்த முடியாத சூழ்நிலையில் உருவானதால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியவில்லை.

இந்த நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு ராமன் மகன் ஜோதிமணி மனைவி சுமதி இருவரும் சாத்தாம்பாடியில் உள்ள உறவினர் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வந்துள்ளனர்.

அப்போது அவர்களைப் பார்த்த அம்பலம் குடும்பத்தினர் வட்டியும் அசலையும் உடனடியாக கொடுக்க வேண்டும் என்று நிகழ்ச்சியில் இருந்தவர்களை அழைத்து வந்து ஊர் மையப்பகுதியில் உள்ள மந்தையில் வைத்து சுமதியை கம்பத்திலும் மற்றும் ஜோதிமணியை மரத்தில் கட்டி வைத்து கன்னத்தில் தாக்கி உள்ளனர்.

மேலும் மாலை 6 மணிக்கு கட்டி வைத்து இரவு 11 மணி வரை கொடுமை படுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து ராமனின் மகன் ஜோதிமணி (வயது 28) அளித்த புகாரின் பெயரில் மூவரின் பேரும் மீது கந்து வட்டி பிரிவில் வழக்கு பதிவு செய்து ராஜேஷ் என்பவரை கைது செய்து மேலும் தப்பி ஓடிய குற்றவாளிகளை அம்பலம், சாந்தியை வலை வீசி தேடி வருகின்றனர். இதுகுறித்து நத்தம் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி தலைமையில் போலீசார் செய்து வருகின்றனர்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 624

    0

    0