எங்களுக்கும் பெண் இருந்தால் கொடுங்கள்.. நண்பனின் திருமண விழாவில் பேனர் வைத்த இளைஞர்கள் : வைரலாகும் போஸ்டர்.!!!

Author: Udayachandran RadhaKrishnan
27 March 2024, 9:36 am

எங்களுடக்கு பெண் இருந்தால் கொடுங்கள்.. நண்பனின் திருமண விழாவில் பேனர் வைத்த இளைஞர்கள் : வைரலாகும் போஸ்டர்.!!!

வாலாஜாபாத் அருகே திருமண வரவேற்பு பேனரில் அடுத்த மாப்பிள்ளை நாங்கள் பெண் இருந்தால் கொடுங்கள் என அவர்களுடைய சுய விபரங்களை வாலிப இளசுகள் புகைப்படத்துடன் வெளியிட்டு இருப்பது அப்பகுதி வழியாக செல்லும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தம்மனூர் கிராமத்தை சேர்ந்த அகிலா என்ற பெண்ணுக்கும், அங்கம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த தசரதன் என்பவருக்கும் அவளூர் கூட்ரோடு அருகே உள்ள வி.எம்.எம் தனியார் திருமண மண்டபத்தில் நாளை 27.03.2024ம் தேதி திருமணம் நடக்க உள்ளது.

இதை முன்னிட்டு திருமணமாகாத கிராம வாலிப இளசுகள் பலர் ஒன்றினைந்து தம்மனூர் கிராமத்தில் சாலை வழியாக செல்லும் பொதுமக்களை கவரும் வகையில் வித்தியாசமாக திருமண வரவேற்பு பேனர் வைத்து உள்ளனர்.

அதில், மணமக்கள் புகைப்படம் அருகே திருமண நாளிதழ் தலைப்பு செய்தி என குறிப்பிட்டு அதன் கீழே அகிலா வின் மனதை திருடிய குற்றத்திற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது.

திருமண சட்டப்படி மார்ச் (26) அங்கம்பாக்கத்தை சேர்ந்த தசரதன் என்பவர் தம்மனூர் பகுதியை சேர்ந்த அகிலா வை ஒரு ஆண்டாக காதலித்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு 27.03.2024 அன்று பெற்றோர்களால் திருமணம் செய்து வைக்கப்படுகிறது.

மேலும், அடுத்த மாப்பிள்ளை நாங்கள் பெண் இருந்தால் கொடுங்கள் என அவர்களுடைய பெயர், வயது, கல்வி தகுதி, செய்யும் தொழில் உள்ளிட்ட வாசகங்கள் அந்த பேனரில் அச்சிடப்பட்டு உள்ளது.

அதேபோல், பிரேக்கிங் நியூஸ் கல்யாண பந்தியில் கலவரம், விளையாட்டு செய்திகள் வாசிப்பது தினேஷ், கிஷோர் என குறிப்பிட்டு அந்த பகுதி வாலிபர்கள் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது.

இந்த திருமண வரவேற்பு பேனர் தம்மனூர் கிராமம் வழியாக செல்லும் பொதுமக்களை கவர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?