ஆன்மீகத்தில் பற்று இல்லையென்றால் கோடிப்பணம் இருந்தும் புண்ணியம் இல்லை : ஆர்பி உதயகுமார் சூசகம்!

Author: Udayachandran RadhaKrishnan
21 May 2024, 9:25 pm

ஆன்மீகத்தில் பற்று இல்லையென்றால் கோடிப்பணம் இருந்தும் புண்ணியம் இல்லை : ஆர்பி உதயகுமார் சூசகம்!

மதுரை தியாகராஜர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வைத்து அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பின் சார்பில் நடைபெறும் மகாபெரிவா விருது வழங்கும் விழா நடைப்பெற்றது.

நெல்லை பாலு தலைமையில் நடைபெறும் விழாவில் பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் சித்தாஸ்ரமம் தலைவர் எஸ்பி‌ கீதா பாரதி, மதுரை ராணி லேடி மெய்யம்மை ஆச்சி தமிழ் இசை கல்லூரி திருமதி. மல்லிகா, சத்குரு சங்கீத வித்யாலயம் இசைக் கல்லூரி முன்னாள் முதல்வர் பாலா நந்தகுமார் ஆகியோருக்கு மகா பெரியவா விருதினை முன்னாள் அமைச்சர் ஆர்பி. உதயகுமார் கலந்து கொண்டு விருது வழங்கி சிறப்பித்தனர்.

முன்னதாக விழாவில் முன்னாள் அமைச்சரும் எதிர்கட்சி துணை தலைவருமான ஆர்பி.உதயகுமார் பேசியதாவது பல்வேறு துறைகளில் சிறப்பானவர்களை கண்டறிந்து விருது வழங்கி‌வருகிறார் நெல்லை பாலு.

ஆன்மீகம் என்பது எந்த மதமாக இருந்தாலும் சரி எதோ ஒரு நம்பிக்கையில் ஒரு கட்டுப்பாட்டு வளையத்துக்குள் அவர்களை கொண்டு வரவேண்டும் என்று சொன்னால் ஆன்மீகம் என்பதும் கடவுள் என்பதும் நமக்கு மேலே ஒரு சக்தி இருக்கிறது எனாறு சொல்வதும் நாம் நம்பி அந்த நம்பிக்கை அடிப்படையில் கொண்டு போவோம். பிறக்கும் போது மனிதனாக பிறந்து மனித வள தானாகவே வாழ்ந்து மனிதனாக சேவை செய்து இறுதி காலத்தை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும் என்று சொன்னால் அதற்கு ஆன்மீகம் உடன் இருந்தால் தான் சாதிக்க முடியும்.தவிர வேறு எதை கொண்டும் சாதிக்க‌ முடியாது.

ஒருவரிடம் ஆன்மீகத்தில் பற்று இல்லை புரிதல் இல்லை என்று சொன்னால் அவரிடம் கோடி கணக்கில் பணம் இருந்தாலும் ஆன்மீகம் சிந்தனை ஒன்று இல்லை என்றால் அவரிடம் இருக்கும் கோடிக்கண சொத்து பணம் எல்லாம் பூஜ்ஜியமாக தான் இருக்கும்.அவரை மனிதனாக இந்த சமுதாயப் பார்க்காது.

ஒரே ஒரு வேஷ்டியை கசக்கி கட்டி கொண்டு ஆன்மீக புரிதலோடு கோடிக்காணக்கில் பணம் இல்லை. நாலு வீட்டில் யாசகம் பெற்று வாழக்கூடிய ஆன்மீக புரிதல் உள்ள பெரியோர்களை இந்த நாடும், நாட்டு மக்களும் பாதம் தொட்டு வணங்கி ஐயா ஆசி வழங்குகள் என சொல்லக்கூடிய காட்சியையும் நாம் பார்க்கிறோம்‌.

ஆன்மீக சிந்தனை பற்றுள்ளவர்களுக்கு நல்ல குணாதிசியங்கள் வந்து விடுகிறது. ஆன்மீக சிந்தனை உள்ளவர் தன்னை சுற்றி மகிழ்ச்சியாக வைத்து கொள்கிறார்கள்‌. ஆன்மீக சிந்தனை இல்லாமல் மிருக குணம் உள்ளவர்கள் எங்கு சென்றாலும் கலவரம் தான்.

காமம், கோபம், குரோதம், பழி‌வாங்கும் உணர்ச்சி இப்படி மிருக குணங்கள் மனித குணங்களோடு உள்ளது‌ அவற்றை நிரந்தரமாக ஆசுவாசப்படுத்தி தூங்க வைக்க வைப்பது ஆன்மீகம்.

ராமாயனம் கட்டுக்கதை, கட்டுக்கதை இதிகாசம் போன்ற விவாதத்திற்கு நான் செல்லவில்லை. ஆனா பல ஆயிரம் ஆண்டுக்கு முன்னரே ஒரு மனிதன் இப்படி தான் வாழ வேண்டும் என கற்றுத் தந்திருக்கிறது ராமாயணம்.

மேலும் படிக்க: குற்றால வெள்ளத்தில் சிக்கி பலியான வ.உ.சி கொள்ளுப் பேரன் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்குக : சரத்குமார் வலியுறுத்தல்!

ஆன்மீகம் இல்லை என்றால் மனிதன் இல்லை என்றார். இதை தொடர்ந்து பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் பக்தி சொற்பொழிவு நடைப்பெற்றது‌.

  • DSP Removed From Good Bad Ugly Movie கங்குவா தோல்வியால் அஜித் படத்தில் இருந்து தேவி ஸ்ரீ பிரசாத் நீக்கம்? இணையும் பிரபலம்!
  • Views: - 259

    0

    0