உடம்புல தெம்பு வேணுமா… மாட்டுக்கறி நல்லா சாப்பிடுங்க : பாசறை கூட்டத்தில் சீமான் பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
12 February 2023, 6:17 pm

சென்னை அடுத்துள்ள பூந்தமல்லியில் நடந்த நாம் தமிழர் கட்சியின் வீரக்கலைப் பாசறை நிகழ்ச்சியில் பேசிய சீமான் தனது பள்ளி கால நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

அவர் பேசியதாவது , நம்முடைய பாரம்பரிய கலைகளை குறிப்பாக வீரக்கலையை அழிய விடாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது, வீரக்கலையையோ கற்றுக்கொள்ள பிள்ளைகளை அனுப்பிய ஒவ்வொரு பெற்றோருக்கும் எனது அன்பும் வாழ்த்துகளும்.

எனது கிராமத்தில் வேறு யாரும் என்னுடன் கற்கவில்லை. நான் மட்டுமே தனியாகச் சென்று கற்றேன். அப்போது ஊரே என்னைப் பார்த்துச் சிரிப்பார்கள். இருப்பினும், எனது அப்பா அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் என்னை ஊக்குவித்தார்.

மாட்டுக்கறி நல்லா சாப்பிடுங்க..’கோழி, ஆடு எல்லாம் சாப்பிடுங்க..”அப்போதான் தெம்பு வரும்.. என தெரிவித்தார்.

  • it is not easy to direct salman khan ரொம்ப கஷ்டம், அவர் இஷ்டத்துக்குதான் நடிப்பாரு- எல்லை மீறிப்போன முருகதாஸ் பட ஹீரோ?