பதவிக்கு நாங்க ஆசைப்பட்டிருந்தால் பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்போம் : எடப்பாடி பழனிசாமி பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
4 April 2024, 7:26 pm

பதவிக்கு நாங்க ஆசைப்பட்டிருந்தால் பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்போம் : எடப்பாடி பழனிசாமி பேச்சு!!

நீலகிரி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வனை ஆதரித்து கோவை காரமடை பகுதியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரசும், தி.மு.க.வும்தான், ஆனால் தி.மு.க.வினர் பொய் பேசி நீட் தேர்வை எதிர்க்கின்றனர்.

நீட் தேர்வை தடுத்த நிறுத்த போராடியது அ.தி.மு.க.தான். தி.மு.க.வில் உழைத்து ஓடாய் தேய்ந்தவர்களுக்கு பதவி கிடைக்காது; வாரிசுகளுக்குதான் பதவி அளிக்கப்படுகிறது.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் நடக்கின்றன. தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனர்.

மக்களுக்கான ஆட்சியை கொடுத்தது அ.தி.மு.க.தான்.அ.தி.மு.க. பதவிக்கு ஆசைப்படவில்லை; அதிகாரம் தேவையெனில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்திருப்போம்.

‘இந்தியா’ கூட்டணியில் யார் பிரதமர் வேட்பாளர்?. சிறுபான்மையின மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘இந்தியா’ கூட்டணி, ‘இந்தியா’ கூட்டணி என்கிறார் என அவர் கூறினார்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 263

    0

    0