சந்திர மண்டலத்தில் குடியேறலாம் என்றால் முதலில் செல்வது இந்துவா? கிறிஸ்துவரா? இஸ்லாமியரா? சீமான் கேள்வி!!
Author: Udayachandran RadhaKrishnan21 October 2023, 2:27 pm
சந்திர மண்டலத்தில் குடியேறலாம் என்றால் முதலில் செல்வது இந்துவா? கிறிஸ்துவரா? இஸ்லாமியரா? சீமான் கேள்வி!!
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்ட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர் சாதிவாரிய கணக்கெடுப்பு வேண்டும் என முதலில் தமிழ்பெருங்குடி ஆனந்தம் அவர்கள் தான் பேசிய 69 இட ஒதுக்கீடு பெற்று தந்ததவர். அதன் பின் சாதிவாரியாக கணக்கு எடுப்பு வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் மற்றும் நான் ஆகியோர் போராடி வருகிறோம். அன்று முதல் இன்று வரை சாதி வாரிய கணக்கெடுப்பு பேசப்பட்டு வருகிறது.
தற்போது நாடாளுமன்ற தேர்தல் வரை இதைப் பற்றி பேசுவார்கள். அண்மையில் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது. முதலில் ஆட்சியில் வேண்டாம் பாஜக தனது கட்சியில் உள்ள பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை தருமா? தேர்தல் வரும்போது மட்டும் நம்மீது பாசம் அக்கறை பற்று விலைவாசி உயர்வு போன்றவை ஞாபகம் வருகிறது.
தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் 1947 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு 1967ஆம் ஆண்டு தான் ஆட்சியை பிடித்தது. அப்படித்தான் தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி தனது அடித்தளத்தை வளர்த்தி வருகிறது.
நாம் தமிழர் கட்சியின் மீது நம்பிக்கை வரும் போது பிற கட்சி சார்ந்தவர்கள் எங்களுடன் கூட்டணிக்கு வருவார்கள். காவிரி பிரச்சினையில் காவிரி ஒழுங்காற்று குழு, காவிரி மேலாண்மை வாரியம், போன்றவற்றில் உள்ள அதிகாரிகள் முறையாக இல்லை, இரு மாநில அதிகாரிகள் சமமாக இருக்கவேண்டும், எதுக்கெடுத்தாலும் நீதிமன்றம் செல்லவேண்டும் என்றால் பிறகு எதற்காக சட்டமன்றம், நாடாளுமன்றங்கள், உள்ளது. அதற்காக ஏன் பல ஆயிரம் கோடி செலவு செய்து தேர்தல் நடந்தவேண்டும்,
காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழகத்திற்கு தண்ணீர் தராத நிலையில் இந்தியா கூட்டணியில் இருந்து திமுக வெளியேற வேண்டும் என அதிமுக வலியுறுத்தல் தொடர்பான கேள்விக்கு.
இந்த கோரிக்கையை முதலில் நாம் தமிழர் கட்சி தான் தெரிவித்தது. இதில் திமுக குறைந்தபட்சம் இந்தியா கூட்டணி இல்லை என்றாலும் காங்கிரசுடன் உடன்படிக்கை இல்லை என முதலமைச்சர் ஸ்டாலின் முடிவு எடுப்பாரா? என தெரியவில்லை கர்நாடக அரசு அந்த மாநில மக்களுக்கு உண்மையாக இருக்கும்போது தமிழக மக்களுக்கு முதலமைச்சர் உண்மையாக இருக்க வேண்டும்.
ஒரு சொட்டு தண்ணீர் கொடுக்க முடியாது என கர்நாடக அரசு சொல்லும்போது இங்கு தேர்தலில் நிற்க இடம் இல்லை என முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும். எடுப்பாரா? அதை விடுத்து தற்போது தமிழக முதலமைச்சர் தமிழக மக்களின் நலனை விட இந்தியாவை காப்பாற்ற போகிறேன் என முடிவெடுத்து விட்டார்.
எல்லா மாநில உரிமைகளை பறி கொடுத்தது திமுக தான், மாநில சுயாட்சி, கல்வி, மருத்துவம், மின்விநியோகம், சாலை பராமரித்தல், கல்விக் கொள்கை, போன்ற அனைத்தையும் பறிகொடுத்தது திமுக தற்போது இந்தியாவை காப்பாற்ற போகிறேன் என பேசுகிறார்.
பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய பிறகு அதிமுகவில் இருந்து உங்களுக்கு கூட்டணி அழைப்பு விடுத்தாக என்ற கேள்விக்கு .. நாங்கள் தேர்தலுக்கான வேட்பாளர்கள் முன் பணிகளில் உள்ளோம். கூட்டணிக்கு அழைப்பார்கள்.
இன்னும் நாள் உள்ளது பிறகு தான் பேசவேண்டும் என்றார். ககல்யான் விண்கலம் கடைசி நிமிடம் நிறுத்தம் தொடர்பான கேள்விகள். இந்தியா மேற்கொள்ளும் இந்த ஆராய்ச்சியால் நமக்கு என்ன பயன் 28 கோடி மக்கள் இரவு உணவு இல்லாமல் இருப்பதாக பாஜக தான் சொன்னார்கள். கொனோரா காலத்தில் 80 கோடி ஏழைகளுக்கு 5 கிலோ அரிசி, 2 கிலோ பருப்பு வழங்கியதாக நிதி அமைச்சர் பேசுகிறார்.
சாலையை முறையாக போடுங்கள்,நாட்டில் பிச்சை எடுப்பது வளர்ச்சி இல்லை பிச்சைக்காரன் இல்லாமல் இருப்பது தான் வளர்ச்சி, ஜி-20 மாநாடு காமன்வெல்த் போட்டிகள் நடந்தபோது பதாகைகள் வைத்து குடிசைகளை மறைந்தனர். ஒரேநாளில் 13 ஆயிரம் பிச்சைக்காரர்களை லாரியில் ஏற்றி வேறு மாநிலத்திற்கு அழைத்து சென்று விட்டனர். இவர்கள் பேச்சு எல்லாம் எடுத்துக்கொள்ள முடியாது.
சரி அப்படி சந்திர மண்டலத்தில் குடியேறலாம் என்றால் முதலில் இந்து, கிறிஸ்டின், முஸ்லிம், இதில் யாரை முதலில் குடியேற்றுவீர்கள், உங்களை குடி அமர்த்த விட்டு விட்டு அமெரிக்கா ரஷ்யா போன்ற நாடுகள் அமைதியாக இருக்கும், இந்த ஆராய்ச்சி எல்லாம் டெண்ட காசு, கருமாந்தம் பிடித்த காசு, சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன நிலையில் வாக்களிப்பது இயந்திரத்தில் போட்டுவிட்டு, மனிதக் கழிவை மனிதன் அல்லும் நிலை உள்ளது.
சூரியனை சுற்றி ஆராய்ச்சி செய்து தற்போது என்னவாக போகிறது. தமிழகத்தில் சுங்க சாவடிகளை அகற்ற வேண்டும் என மாநில அரசு வலியுறுத்துகிறது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என அமைச்சர் எ.வ.வேலு சட்டப்பேரவையில் பேசியது தொடர்பான கேள்விக்கு, திமுக மன்மோகன் சிங் ஆட்சியில் கூட்டணி இருந்தபோது ஏன் சுங்க சாவடிகளை அகற்றவில்லை, திமுக தான் நீட் தேர்வு, ஜிஎஸ்டி, சி ஐ ஏ, என் ஐ ஏ, போன்றவற்றை கொண்டு வந்தது. தற்போது திமுக புனிதரை போல் செயல்படுகிறது.
வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பிற கட்சிகளுடன் கூட்டணி சேருவதற்கான வாய்ப்புகள் இல்லை, எனது கட்சியில் பிரதமர் வேட்பாளர் இல்லை என கேட்கிறார்கள் எனது கட்சியின் பிரதமர் வேட்பாளர் என்னுடைய நான் சார்ந்த பிரச்சினைகள் தீர்ப்பவர்கள் தான் பிரதமர் வேட்பாளர் என தெரிவித்தார்.