2 மாசம் டைம் கொடுத்திருந்தா எல்லா வசதியும் செஞ்சிருப்போம் : ஈரோடு இடைத்தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர் பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
6 February 2023, 9:51 pm

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 42 வது வார்டில் வைராபாளையத்தில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் நேரு, சட்டமன்ற உறுப்பினர் செல்வப் பெருந்தகை, வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

பிரச்சாரத்தில் அமைச்சர் நேரு பேசும்போது, அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்காக ரூ.450 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார்.

தார் சாலை, கால்வாய், தெரு விளக்கு, மழை நீர் வடிகால் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் தரப்படும்.

இன்னும் இரண்டு மாதம் இருந்திருந்தால் அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்திருப்போம். உடனடியாக தேர்தல் அறிவித்து விட்டதால் பணிகளை செய்யவில்லை. தேர்தல் முடிந்தவுடன் எல்லா வசதிகளும் செய்து கொடுப்போம் என உறுதி அளித்தார்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 393

    0

    0