பயமா இருந்தா கட்சியை விட்டு வெளிய போங்க : கட்சி தாவிய விஜயதாரணி.. காங்கிரஸ் வெளியிட்ட அறிவிப்பு!
விஜயதரணி பாஜகவில் இன்று அதிகாரப்பூர்வமாக இணைந்தார். அவர் கடந்த 2 வாரங்களாக டெல்லியில் முகாமிட்டிருந்த நிலையில், இன்று அவர் பாஜகவில் இணைந்தார்.
காங்கிரஸ் கட்சி சார்பில் லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அவர் பாஜகவில் இணைந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
விஜயதரணி கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் 3 முறை வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக உள்ளார். கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டதாகவும் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அவர் அதிருப்தியில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அவர் இன்று டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார். இந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி விஜயதரணியை விமர்சிக்கும் விதமாக தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளது.
அதாவது, காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ராகுல் காந்தி பேசிய பழைய வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளது. அதில் ராகுல் காந்தி கூறியிருப்பதாவது:- எதற்கும் பயப்படாத அச்சமற்ற உண்மையான போராளிகளை மட்டுமே காங்கிரஸ் விரும்புகிறது. பயப்படுபவர்கள் கட்சியை விட்டு வெளியேறுங்கள். உங்களுக்கு ஆர்.எஸ்.எஸ் தான் சரியான இடம்” என்று பதிவிட்டுள்ளார்.
சீமான் மீது அளித்த புகாரின் மீது இனி எந்தப் போராட்டம் நடத்தப்போவதில்லை என நடிகை விஜயலட்சுமி தான் வெளியிட்ட வீடியோ…
நடிகை மீனாட்சி செளத்ரியை மாநில பெண்கள் அதிகாரமளித்தல் பிராண்ட் அம்பாசிடராக ஆந்திர அரசு நியமித்ததாக வரும் தகவலில் உண்மையில்லை என…
கொரோனா பேரிடரின்போது உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்…
விஜய் அரசியல் கட்சி துவங்கியதும் பலரும் பலவிதமாக விமர்சித்து வரும் நிலையில், இயக்குநர் பேரரசு கூறியுள்ளது யோசிக்க வைத்ததுள்ளது. இயக்குநர்…
விடாமுயற்சி தோல்விக்க பிறகு அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி. திரிஷா, அர்ஜூன் தாஸ் பிரசன்னா உட்பட பலர் நடிக்கும்…
This website uses cookies.