லவ் பண்ணு இல்லனா கொன்றுவேன்… 16 வயது சிறுமியை காதலிக்க வற்புறுத்தி மிரட்டல் விடுத்த இளைஞர் கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
20 August 2022, 9:25 pm

திண்டிவனத்தில் 16 வயது சிறுமியை காதலிக்க மிரட்டி கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

திண்டிவனம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி திண்டிவனத்தில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை பெருமாள் கோயில் தெருவில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை பார்ப்பதற்காக அவரது உறவினருடன் வந்துள்ளார்.

பின்னர் சாமி தரிசனம் செய்து விட்டு உறவினருடன் பைக்கில் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது காந்தி சிலை அருகே சிறுமி சென்ற வாகனத்தை வழிமறித்த, திண்டிவனம் தியாகி சண்முகப்பிள்ளை தெருவை சேர்ந்த ஈயாகத் அலி மகன் அஸ்கர்(வயது 22), என்பவர் சிறுமியை காதலிக்க வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

மேலும் காதலிக்கவில்லை என்றால் கொலை செய்து விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது. இதனால் பெண்ணின் பெற்றோர் திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் போலீசார் அஸ்கர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!