6 பிரியாணி சாப்பிட்டால் ₹1 லட்சம் பரிசு.. மகனின் ஆட்டிசம் சிகிச்சைக்காக போட்டியில் பங்கேற்ற தந்தை உருக்கம்!

Author: Udayachandran RadhaKrishnan
28 ஆகஸ்ட் 2024, 4:05 மணி
Biriyani
Quick Share

கோவை ரயில் நிலைய சந்திப்பு வெளியே, ரயில் பெட்டியை ஹோட்டல் போல் வடிவமைத்து உள்ளனர். இதனை கேரள மாநிலத்தைச் சேர்ந்த செம்மனூர் நகைக்கடை உரிமையாளர் பாபி குத்தகைக்கு எடுத்து ஹோட்டல் தொடங்கியுள்ளார்.

கடை விளம்பரத்திற்காக, இன்று பிற்பகல் அரை மணி நேரத்தில் 6 பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு என்றும், நான்கு பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு ஐம்பதாயிரம் பரிசு என்றும், மூன்று பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் பரிசு என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனை அறிந்த கோவை மற்றும் கேரளா மாநிலத்தில் இருந்து, நூற்றுக்கணக்கான இளைஞர்கள் குவிந்தனர். இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை, ரயில் நிலைய சந்திப்பு சாலையில் நிறுத்தியதால், அங்கே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த ரேஸ்கோர்ஸ் காவல்துறை, சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர். சாதாரணமாக ஹோட்டலில் கொடுக்கப்படும் ஒரு பிரியாணி அளவை போல், மூன்று மடங்கு இருந்ததாகவும், இதனால் அதிகம் உட்கொள்ள முடியவில்லை என போட்டியாளர்கள் தெரிவித்தனர்.

இதேபோல் சிக்கன் பிரியாணியை, பாத்திரத்தில் அமிக்கி வைத்து கொடுத்ததால், உண்ண முடியவில்லை என போட்டியாளர்கள் குற்றம் சாட்டினர். குடும்பத்தின் ஏழ்மையான சூழலை போக்குவதற்காக, போட்டியில் பங்கேற்று ஒரு லட்சம் பணத்தை வெல்லலாம் என்ற ஆர்வத்தில் வந்த போட்டியாளர் ஒருவர், 6 பிரியாணியை அரை மணி நேரத்தில் உண்ண முடியாமல் வருத்தத்துடன் வெளியேறினார்.

15 வயது ஆட்டிசம் குறைபாடுள்ள மகனின் சிகிச்சைக்காக பிரியாணி போட்டியில் பங்கேற்ற தந்தை, தனது மகனின் நிலை குறித்து உருக்கமாக பேசினார்.

கால் டாக்சி ஓட்டுநராக பணியாற்றி வரும் அவர், சின்ன வேடப்பட்டி பகுதியை சேர்ந்த அவர், தனது 15 வயது மகனை பள்ளியில் சேர்க்க 19 ஆயிரம் ரூபாய் தேவை என்பதால் இப்போட்டியில் பங்கேற்றதாக உருக்கமாக பேசினார்.

குறைந்த செலவில் இப்படி, இலவசம் மற்றும் போட்டி நடத்துவதால், பொதுமக்களிடையே புதிதாக திறக்கப்பட்ட இந்த ஹோட்டல் எளிதாக சென்றடையும் என்பது இந்த போட்டியின் வியாபார யுக்தி.

  • Death sentence தாயை கொலை செய்து உறுப்புகளை சமைத்து சாப்பிட்ட கொடூர மகன் : அதிரடி தண்டனை!
  • Views: - 214

    0

    0