இங்கெல்லாம் கொப்புளங்கள் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும் : குரங்கு அம்மை முன்னெச்சரிக்கை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்!!

Author: Udayachandran RadhaKrishnan
18 July 2022, 9:44 pm

கோவை விமான நிலையத்தில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் குரங்கு அம்மை நோய் தடுப்பின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் .அப்போது பேசிய அவர்,
குரங்கம்மை பாதிப்பு 63 நாடுகளில் பெரியளவிலான தாக்கம். இந்தியாவில் கேரளா மற்றும் தெலுங்கானாவில் தலா ஒருவருக்கு குரங்கம்மை நோய் அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சென்னை, கோவை ,மதுரை, திருச்சி போன்ற விமான நிலையங்களில் குரங்கம்மை பரவலால் பாதிக்கப்பட்ட 63 நாடுகளிலிருந்து வருபவர்களை கண்காணிக்க மக்கள் நல்வாழ்வு துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து கண்காணித்து வருகிறது.

கோவையில் காலை மற்றும் மாலையில் வரும் சர்வதேச விமானங்களில் 150 முதல் 170 பயணிகள் வருகிறார்கள். ஜூலை மாதத்தில் விமான பயணிகளுக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் யாருக்கும் கொரோனாவோ குரங்கம்மை நோயோ கண்டறியப்படவில்லை.

கோவை விமான நிலையத்தில் ஒரு ஆர்.டி பி சி ஆர் மையம் தயார் நிலையில் உள்ளது. யாரும் ஆறிகுறியுடன் வந்தால் அவர்களை தனிமை படுத்த ஒரு படுக்கை வசதியுடன் தணி அறை தயார் நிலையில் உள்ளது.

மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையோ அல்லது பிற இடங்களிலோ பிரத்யேகமாக ஒரு வார்டு தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குரங்கம்மைக்கென சென்னையை தொடர்ந்து கோவையிலும் பத்து படுக்கைகளுடன் கூடிய தனி வார்டு தயார் படுத்தப்பட உள்ளது. குரங்கம்மை நோய் கண்டறிய தமிழகத்தில் ஒரு ஆய்வகம் அமைக்க ஒன்றிய அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம். அனுமதி கிடைக்கும் பட்சத்தில் சென்னை கிங் ஆய்வு மையத்தை பயன்படுத்துவோம்.

கேரளா -தமிழகம் இடையே 13 இடங்களில் பொது பாதை உள்ளது. முகம் மற்றும் முழங்கையிலோ கொப்புளங்கள் இருந்தால் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது
வருகிற ஞாயிற்று கிழமை அன்று தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் பூஸ்டர் தடுப்பூசி போட உள்ளோம்.

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டம் தமிழகத்தில் முறையாக செயபடுத்தபடவில்லை என்ற மத்திய நிதித்துறை இணை அமைச்சர் குற்றச்சாட்டு கூறியது குறித்த கேள்விக்கு, அவர் எந்த இடத்தில் தொய்வு என கூறினால் அதனை சரி செய்வோம்.அது தெளிவில்லாத விஷயமாக கருதுகிறோம்.

ஒன்றிய அமைச்சரை கடந்த மாதம் இரு முறை சந்தித்துள்ளோம்.அப்போது மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம் நீங்கள் செயல்படுத்தும் முறையை எங்களுக்கு தாருங்கள் என கூறினார்.

ஒன்றிய அமைச்சர் உலகளவிலான மாநாட்டிற்கு தமிழக சுகாதார துறை அமைச்சரான என்னை அழைத்திருந்தார். சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிகிறது. ஆனால் இணை அமைச்சர் தெரியாமல் பேசுகிறார்.

உலகிலேயே தமிழகத்தில் தான் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் அவரவர் இல்லங்களுக்கே சென்று மருத்துவ சேவை அளிக்கப்படுகிறது. இதுவரை 81 வது லட்சத்தை தொட இருக்கிறோம்.

தமிழகத்தில் இதுவரை பாதிப்பு இல்லாததால் குரங்கம்மை குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது. தற்போது பரவ துவங்கியுள்ளதால் பிரதான நகரங்களிலும் குரங்கம்மை நோய் குறித்த விழிப்புணர்வு இயக்கங்கள் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

மழைக்காலம் துவங்கியுள்ளதால் கொசு புழுக்களை அதனை லார்வா நிலையிலேயே அழிக்கும் பணியானது துவங்கப்பட்டுள்ளது. பருவமழை வரும் போது டெங்கு நோய் வரும்.ஆனால் அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ