ஆவின் ஊழலை சுட்டிக்காட்டினால் பொய் புகார் அளிக்கின்றனர் : சட்டரீதியான போராட்டம் நடைபெறும் என பால்முகவர்கள் சங்கம் அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
11 August 2022, 7:16 pm
Quick Share

சென்னை பெரம்பூரில் செய்தியாளர்களை சந்தித்த பால் முகவர்கள் சங்கத்தினர் பேட்டி தலைவர் பொன்னுசாமி, ஆவின் நிறுவனத்தின் ஊழலை சுட்டிகாட்டினால் நாங்கள் தனியார் பால் நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்படுவதாக பொய்யான குற்றச்சாட்டை ஆவினில் இருக்கும் ஊழல்வாதிகள் சிலர் கூறுகின்றனர். இதற்கு கால்நடை மருத்துவர்களை பயன்படுத்துகின்றனர்.

ஆவினில் பாலின் தரத்தை கண்காணிப்பதற்காக வாங்கப்பட்ட இயந்திரம் மூலம் கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளது. பேருந்து , ஆட்டோ கட்டணத்தை தீர்மானிப்பது போல் பால் விலையையும் தீர்மானிக்க வேண்டும்.

தீவன விலை கடும் உயர்வால் கால்நடை வளர்ப்போர் மாடுகளை அடிமாட்டு விலைக்கு விற்று வருகின்றனர். ஆவினில் 107 milk compriser இயந்திரங்கள் கொள்முதலில் 2 கோடி வரை முறைகேடு நடந்துள்ளது.

ஆவின் கால்நடை மருத்துவர்கள் , பால் குளிர்விப்பு நிலையம் போன்றவற்றில் அமைச்சர்களுக்கு பணம் பெற்றுத்தரும் வேலையைத்தான் செய்கின்றனர். ஆவின் நிர்வாகம் சீர்படுத்தப்பட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை.

2014 ல் ஆவின் விற்பனை விலையை லிட்டருக்கு 10 ரூபாய் ஜெயலலிதா உயர்த்தியதை வரவேற்றோம் , அதில் 8 ரூபாய் உற்பத்தியாளர்களுக்கு கிடைத்தது. ஆவின் பால் கொள்முதல் விலையை 2019 ல் லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தினார் எடப்பாடி. அதன்பிறகு விலை உயர்வு வழங்கப்படவில்லை.

லிட்டருக்கு 10 ரூ வரை கொள்முதல் விலையை அரசு உயர்த்த வேண்டும். மத்திய அரசின் ஜிஎஸ்டியை காரணம் காட்டி 40 சதவீதம் வரை பால்பொருள் சார்ந்த விற்பனை விலையை தமிழக அரசு உயர்த்துவது தவறு.

எங்களது கோரிக்கை தொடர்பாக அரசின் கவனத்தை ஈர்க்க ஆர்ப்பாட்டம் பேரணி நடத்தி, சட்டரீதியாகவும் போராடுவோம். தற்போது தனியார் நிறுவனங்களின் பால் விலை உயர்வதால் டீ , காபி , பால் சார்ந்த பொருள்களின் விற்பனை விலை உயர்வதை தடுக்க முடியாது ” என்று கூறினார்.

  • Tamil OTT Release Today இன்னைக்கு ஓடிடில இத்தனை படம் ரிலீஸா? கங்குவாவை பதம் பார்க்கும் லிஸ்ட்.!!
  • Views: - 481

    0

    0