நீங்க சொன்னா உடனே அறநிலையத்துறை கலைக்க முடியுமா? அண்ணாமலையை சீண்டிய அதிமுக முன்னாள் அமைச்சர்!!

Author: Udayachandran RadhaKrishnan
8 November 2023, 1:29 pm

நீங்க சொன்னா உடனே அறநிலையத்துறை கலைக்க முடியுமா? அண்ணாமலையை சீண்டிய அதிமுக முன்னாள் அமைச்சர்!!

நேற்று, அண்ணாமலை திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் “என் மண் என் மக்கள்” பயணத்தை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக கோவில் முன் இருக்கும் கடவுள் மறுப்பாளர்கள் சிலை அகற்றப்படும்.

கடவுளை நம்புபவன் முட்டாள் என சொல்லியவரின் சிலைகள் அகற்றப்படும். அதற்கு பதிலாக ஆழ்வார்கள் நாயன்மார்கள், தமிழ் புலவர்கள், திருவள்ளுவர் சிலை அங்கு வைக்கப்படும் என தெரிவித்தார். பாஜக தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்ற அந்த நாள் இந்து அறநிலையத்துறையின் கடைசி நாள்.

ஆட்சி பொறுப்பேற்றவுடன் இந்து அறநிலையத்துறை கலைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், அண்ணாமலை சொன்னதற்காக அறநிலையத்துறையை கலைக்க முடியுமா?. அறநிலையத்துறை தொடர்ந்து செயல்பட வேண்டும்.

பெரிய கோவில்களின் வருவாயில்தான் சிறிய கோவில்கள் செயல்படுகின்றன இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சிறப்பாக செயல்படுகிறார் என புகழாரம் சூட்டியுள்ளார்.

  • income tax department sent notice to empuraan director prithviraj பிரித்விராஜ்ஜுக்கு வந்த நோட்டீஸ்; கவர்மெண்ட்டு வேலையை காட்டிருச்சு- பொங்கும் நெட்டிசன்கள்…