பாடல்களை பயன்படுத்த இளையராஜாவுக்கு உரிமை இல்லை.. ECHO நிறுவனம் வைத்த செக் : நீதிமன்றம் பரபர உத்தரவு!
Author: Udayachandran RadhaKrishnan13 June 2024, 7:52 pm
இசையமைப்பாளர் இளையராஜாவின் 4,500 பாடல்களை பயன்படுத்த உரிமை உள்ளதாக கூறி எக்கோ நிறுவனம் மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்துள்ளது.
இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சம்பளம் கொடுத்து இசை சேவையை பெறும் தயாரிப்பாளர் தான் முதல் காப்புரிமை உரிமையாளராகிறார் என எக்கோ நிறுவனம் தனது வாதத்தை முன்வைத்துள்ளது.
அதனால், பதிப்புரிமை தொடர்பாக தயாரிப்பாளர்களுடன் எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளாத இசையமைப்பாளர் இளையராஜா, பாடல்கள் மீது எந்த உரிமையும் கோர முடியாது.
மேலும், இசையை திரித்தாலோ, பாடல் வரிகளை மாற்றினாலோ மட்டும் தான் தார்மீக உரிமை வரும். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பதிப்புரிமையை யாருக்கும் வழங்குவதில்லை. ஆனால், இளையராஜா பட தயாரிப்பாளரிடம் தன் உரிமையை வழங்கிவிட்டார் என எக்கோ நிறுவனம் கூறியுள்ளது. இந்நிலையில், இளையராஜா தரப்பு வாதங்களுக்காக விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.