ஆளுநருக்கு ஆர்டர் போட்ட இளையராஜா.. மேடையில் நடந்தது என்ன? சென்னை ஐஐடியில் பரபரப்பு!
Author: Udayachandran RadhaKrishnan21 May 2024, 4:59 pm
ஆளுநருக்கு ஆர்டர் போட்ட இளையராஜா.. மேடையில் நடந்தது என்ன? சென்னை ஐஐடியில் பரபரப்பு!
சென்னை ஐஐடி வளாகத்தில் இளையராஜா Music learning and research சென்டர் தொடங்க முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஐஐடி மெட்ராஸ் மற்றும் இளையராஜா தரப்பிற்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதையடுத்து ஐஐடி வளாகத்தில் இசை புதிய ஆராய்ச்சி மையத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த விழாவில் இளையராஜா, திரிபுரா ஆளுநர் இந்திரசேனா ரெட்டி, ஐஐடி இயக்குநர் காமகோடி பங்கேற்றனர்.
இந்த விழாவில் பேசிய இளையராஜா, ‛இது எனது வாழ்க்கையில் மிக முக்கியமான நாள். இசையைக் கற்றுக்கொள்ள வந்த எனக்கு அப்போது அம்மா 400 ரூபாய் கொடுத்து அனுப்பினார். அன்று கிராமத்தில் இருந்து இசையை கற்றுக் கொள்ள எப்படி இருந்தேனோ. இப்போதும் அதேபோலத் தான் இருக்கிறேன். மூச்சு விடுவது போல் எனக்கு இசையும் இயற்கையாக வருகிறது.கிராமத்தில் இருந்து இசை கற்றுக் கொள்ள வந்த நான், இன்று என்னுடைய பெயரில் சென்டர் ஆரம்பித்து இசை கற்றுக் கொடுக்கப் போகிறேன் . இது நிச்சயம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன். இந்த மையத்தில் இருந்து குறைந்தது 200 இளையராஜா உருவாக வேண்டும் என பேசினார்.
முன்னதாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர், தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் வந்தே மாதரம் பாடல் பாடப்பட உள்ளதாக அறிவித்ததார்.
உடனே மேடையில் அமர்ந்திருந்த திரிபுரா ஆளுநர் இந்திரசேனா ரெட்டி, ஐஐடி இயக்குநர் காமகோடி. இளையராஜா ஆகியோர் எழுந்து நின்று மரியாதை கொடுத்தனர்.
தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து ஆளுநர் இந்திரசேனா ரெட்டி இருக்கையில் அமர்ந்தார். ஆனால் அடுத்த நொடியே வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டது.
அப்போது தானாகவே சுதாரித்து கொண்ட ஆளுநர் இந்திரசேனா ரெட்டி அவராகவே எழுந்து வந்தே மாதரம் பாடலுக்கு மரியாதை கொடுத்தார். இந்த சம்பவம் மேடையில் சில நிமிடங்கள் பரபரப்பை ஏற்படுத்தியது.