“பாடுவேன் உனக்காகவே” பாட்டாலே பதிலடி கொடுத்தாரா இளையராஜா..? வீடியோ வைரல்..!
Author: Rajesh22 April 2022, 12:34 pm
இசைஞானி இளையராஜா புத்தகம் ஒன்றுக்கு எழுதிய முன்னுரையில், ‘பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்தியாவின் உள்கட்டமைப்புகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.
சமூக நீதி விஷயத்தில் பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மோடியின் முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார். அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள். மோடியின் ஆட்சியை பார்த்து அம்பேத்கர் பெருமைப்படுவார்’ என குறிப்பிட்டிருந்தார்.
அவரது இந்தக் கருத்து பெரும் சர்ச்சையாக மாறி இருக்கிறது. மேலும், இளையராஜா இந்தக் கருத்தை திரும்பப் பெற வேண்டுமென பலர் வலியுறுத்தினர். ஆனால், கருத்தை பின்வாங்கப்போவதில்லை என்பதில் இளையராஜா தெளிவாக இருக்கிறார்.
இதற்கிடையே அவருக்கு பாஜகவினர் தங்களது முழு ஆதரவை கொடுத்துவருகின்றனர். அதேசமயம் சமூக வலைதளங்களில் இளையராஜாவை பலர் கடுமையாக தாக்கியும் வருகின்றனர்.
இந்நிலையில் இளையராஜா பாடல் ஒன்றை பாடி ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். தளபதி படத்தில் இடம்பெற்ற சுந்தரி கண்ணால் ஒரு சேதி பாடலில் வரும் ‘நான் உன்னை நீங்கமாட்டேன் நீங்கினால் தூங்க மாட்டேன் என்ற வரிகளை பாடும் அவர் கூடுதலாக, ‘பாடுவேன் உனக்காகவே… இந்த நாள் நன்னாள் என்று பாடு. என்னதான் இன்னும் உண்டு கூறு’ என்ற வரிகளையும் சேர்த்து பாடியுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகியுள்ளது.