கருணாநிதி எனக்கு தந்தைக்கு சமம்… இசைஞானி பட்டம் எப்படி வந்தது தெரியுமா..? இளையராஜா உருக்கம்..!!

Author: Babu Lakshmanan
3 June 2022, 10:21 am

சென்னை : கலைஞர் கருணாநிதி எனக்கு தந்தைக்கு சமம் என்று இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார்.

கோவை கொடிசியாவில் இளையராஜாவின் 80வது பிறந்தநாளை முன்னிட்டு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு இளையராஜாவிற்கு சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா கலைஞர் கருணாநிதி எனக்கு தந்தைக்கு சமம் எனவும், இளையராஜா என்ற பெயரை நான் வைக்கவில்லை, சிவன் எப்படி சிவன் வைக்கவில்லையே அதேமாதிரி தான் எனக் கூறினார். மேலும், தனது தந்தை வைத்த ஞானதேசிகன் என்ற பெயர் வைத்ததை கலைஞர் கருணாநிதிதான் இசையுடன் சேர்த்து இசைஞானி எனப் பெயரிட்டதாக தெரிவித்தார்.

மேலும், அனைவரின் உணர்வுகளையும் புரிந்து கொண்டவர் தான் கலைஞர் எனவும், அவர் வழியிலேயே முதல்வரும் நாட்டை வழி நடத்தி செல்வது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என அவர் தெரிவித்தார். தமிழக மக்களை முன்னேற்ற ஏராளமான பணிகள் செய்தவர் கருணாநிதி, அந்த பாதையில் நம்முடைய முதல்வர் செல்கிறார் எனவும், தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நாட்டு மக்களுக்கு செய்வதையெல்லாம் தனக்கு செய்து வருவதாக ஏற்றுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

எனக்கென்று நான் இதுவேண்டுமென்று யாரிடமிருந்து எதுவும் கேட்கமாட்டேன் எனவும், எதற்கும் போனதில்லை என தெரிவித்த அவர், தமிழக மக்களை முன்னேற்ற கலைஞர் பட்ட பாடெல்லாம் அரசியல் வட்டாரத்தில் உங்களுக்கு தெரியும் எனவும், அவரது வழியில் சென்று கொண்டிருக்கிற முதல்வரும் அவரது கனவை நிறைவேற்ற வைப்பார் என தெரிவித்தார்.

கோவை இசை நிகழ்ச்சியில் SPB-ஐ நினைவு கூர்ந்த இளையராஜா, என்னுடைய பிறந்த நாளுக்கு அடுத்த இரண்டு நாட்களில் SPBக்கு பிறந்தநாள் வருவதாகவும், நான் பிறந்த பிறகு இரண்டு வருடங்கள் கழித்து அவர் பிறந்தார் என கூறினார். மருத்துவமனைக்கு செல்லும் முன்பு நானும் எஸ்.பி.பியும் மூகாம்பிகை திருக்கோவிலுக்கு சென்றிருந்தோம் எனவும், இப்ப எஸ்.பி.பி இல்லை, அவருடைய மகன் இருக்கிறார் என நினைவு கூர்ந்தார். அப்பாக்களின் பையன்கள் என்னுடைய கச்சேரியில் பாட ஆரம்பித்து விட்டார்கள் எனவும், எஸ்.பி.பி மகன், மலேசிய வாசுதேவன் மகன் ஆகியோர் என குறிப்பிட்டார்.

தொடர்ந்து இசை நிகழ்ச்சியில் இளையராஜா உருவம் படைத்த தங்க நாணயம் வெளியிடப்பட்டது. விரைவில் விற்பனைக்கு வரும் என மேடையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!
  • Close menu