Beast Vs KGF மோதலுக்கு நடுவே டிரெண்டான இளையராஜா..! ஏன் தெரியுமா..?

Author: Rajesh
15 April 2022, 2:37 pm

தமிழ் ரசிகர்கள் மிகவும் ஆவலாக பார்க்க காத்துக் கொண்டிருந்த திரைப்படம் விஜய்யின் பீஸ்ட். நெல்சன் திலீப்குமார் இயக்க, அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படம் கடந்த 13ஆம் தேதி வெளியானது.

இந்த படத்தினை விஜய் ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர். ஆனால் மற்ற ரசிகர்களால் பீஸ்ட் திரைப்படம் கலசையான விமர்சனங்களை தான் பெற்று வருகிறது. இருந்தாலும் தளபதி பெயர் ஒன்றே படத்தின் வசூலுக்கு ஒரு முக்கிய விஷயமாக இருக்கும் என்பதே ரசிகர்களின் நம்பிக்கையே இருக்கிறது.

இதனால் வரும் நாட்களில் பீஸ்ட் பெரியளவில் பாக்ஸ் ஆபீஸில் சொதப்பும் என கூறப்படுகிறது. ஆனாலும் விஜய் ரசிகர்கள் உலகளில் வசூல் படைத்த திரைப்படம் தான் பீஸ்ட் என டிரெண்டிங் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கேஜிஎப்-2 திரைப்படம் பிரமாண்டமாக வெளியானது. பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியான கேஜிஎப் திரைப்படம் மக்களிடையே பேராதரவை பெற்று வருகிறது. இதனிடையே தற்போது கேஜிஎப் -2 திரைப்படத்திற்கு தமிழ்நாட்டில் ஸ்க்ரீன்ஸ் மற்றும் ஷோ கவுண்ட் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேசன் நிறுவனம் ‘மோடியும் அம்பேத்கரும்’ என்ற பெயபுளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேசன் நிறுவனம் ‘மோடியும் அம்பேத்கரும்’ என்ற பெயரிலான புத்தகத்தை வெளியிட்டிருக்கிறது. இந்த புத்தகத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதி இருக்கிறார். அதில், பிரதமர் மோடி தலைமையிலான அரசு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை அமைத்து, சமூகத்தில் பின் தங்கிய மக்களுக்கு சட்டரீதியிலான பாதுகாப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும் வீடுகள், கழிப்பிடங்களை ஏழை மக்களுக்காக மோடியின் ஆட்சியில் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன என்பதை தெரிவித்துள்ளார்.

மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி செயல்பாடுகளை கண்டு அம்பேத்கரே பெருமைப்படுவார் என்றும் அந்த முன்னுரையில் இளையராஜா குறிப்பிட்டுள்ளார். இதனிடையே பிரபல இசையமைப்பாளரும் திரைப்பட இயக்குனருமான கங்கை அமரன் பாஜகாவில் இருக்கிறார். இந்த சூழ்நிலையில் இளையராஜாவும் பிரதமர் மோடியை புகழ்ந்து முன்னுரை எழுதியிருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், விரைவில் பா.ஜ.க.-வில் இணைவார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 1622

    5

    4