விஜய் மக்கள் இயக்க நிர்வாகி கைது.. ஸ்பா பேரில் விபச்சாரம் நடத்தியதாக புகார்.. சென்னையில் வைத்து மடக்கி பிடித்த போலீஸார்…!!
Author: Babu Lakshmanan29 July 2023, 4:08 pm
திருச்சி ; திருச்சியில் அனுமதியின்றி ஸ்பா பேரில் விபச்சாரம் செய்து வந்த விஜய் இயக்க நிர்வாகியை சென்னையில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
திருச்சி கருமண்டபம் சிங்கராயர் நகர் பகுதியில் இயங்கி வரும் ஸ்பாவில் பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக திருச்சி விபசார தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, திருச்சி விபச்சார தடுப்பு பிரிவு காவல்துறை (பொறுப்பு) காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, அந்த வீட்டில் ஷைன் ஸ்பா என்ற பெயரில் கர்நாடகத்தை சேர்ந்த லட்சுமி தேவி என்பவர் இரண்டு பெண்களும் இருந்தனர்.
மேலும், வீட்டில் உள்ள பொருட்களை சோதனை செய்தபோது இந்த ஸ்பா சென்டர் உரிமை பெறாமல் பல ஆண்டுகளாக சட்டவிரோதமாக நடைபெறுவது தெரியவந்துள்ளது. இதையடுத்து அங்கிருந்த இரண்டு பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்துக்கு அனுப்பி அனுப்பி வைத்து, மேலாளர் லட்சுமி தேவியை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, அந்த ஸ்பா நிறுவனம் திருச்சி வயலூர் பகுதியைச் சேர்ந்த தளபதி விஜய் மக்கள் இயக்க திருச்சி மத்திய மாவட்ட பொறுப்பாளராக செயல்பட்டு வரும் செந்தில் என்பவர் தான் இந்த பாவின் உரிமையாளர் என காவல்துறையினருக்கு தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமறைவான செந்திலை தேடி வந்தனர். இந்நிலையில், இன்று ஸ்பா சென்டர் நடத்தி வந்த உரிமையாளர் செந்திலை விபச்சார தடுப்பு பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர்.