நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வடுகம்முனியப்பன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்(35), இவருக்கு திருமணம் ஆகி முதல் மனைவி பூங்கொடி(28) மற்றும் 2 வது மனைவி மணிமேகலை(25) என இருவர் உள்ளனர்.
ரமேஷின் முதல் மனைவி மங்களபுரம் பகுதியை சேர்ந்த பூங்கொடிக்கு 2 குழந்தைகளும் மற்றும் பட்டணம் முனியப்பம்பாளையம் பகுதியை சேர்ந்த மணிமேகலைக்கு 2 குழந்தைகளும் உள்ளது.
ரமேஷ் வாரத்தில் 5 நாட்கள் முதல் மனைவி வீட்டிலும், 2 நாட்கள் 2வது மனைவி வீட்டிற்கும் வந்து சென்றுள்ளார். 2 வது மனைவி மணிமேகலை பக்கத்து வீட்டைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் (எ) பாலாஜிக்கு(27) நட்பு ஏற்பட்டுள்ளது.
பாலாஜிக்கு திருமணமாகி கௌசல்யா(24) என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். மணிமேகலை பாலாஜிக்கு இடையே உள்ள நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது.
இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்த நிலையில் இருவருக்கும் உள்ள தொடர்பு கணவர் ரமேஷ்க்கு தெரிய வந்தது அடுத்த இருவரையும் கண்டித்துள்ளார்.
தொடர்ந்து ரமேஷ் மணிமேகலையை திட்டியதாகவும் இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில் மணிமேகலை பக்கத்து வீட்டை சேர்ந்த பாலாஜியை அழைத்துக்கொண்டு ஆத்தூரில் வீடு வாடகைக்கு எடுத்து குடித்தனம் நடத்தி வந்துள்ளனர்.
ஒரு மாதத்திற்கு மேலாக குடித்தனம் நடத்தி வந்த நிலையில் பாலாஜி முதல் மனைவி வீட்டிற்கு சென்றதாலும், சரியாக மணிமேகலை பார்க்க வராததாலும்,பணம், உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதனால் மணிமேகலை பாலாஜிக்கு தொடர்பு கொண்டு தான் ராசிபுரம் வருவதாகவும் தன்னை அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார். ராசிபுரம் வந்த மணிமேகலையை இருசக்கர வாகனத்தில் பாலாஜி அழைத்துக் கொண்டு பட்டணம் ஏரிக்கரைக்கு சென்றுள்ளார்.
ஏரிக்கரையில் இருவரும் உல்லாசமாக இருந்த நிலையில் அப்போது இருவருக்கும் வாக்குவாதமானது ஏற்பட்டுள்ளது. அப்போது மணிமேகலை என்னை உன்னுடனே அழைத்துச் சென்று விடு என பலமுறை கேட்டதாகவும் அதற்கு பாலாஜி மறுத்து ஆத்திரமடைந்த நிலையில் அருகாமையில் இருந்த கல்லை எடுத்து மணிமேகலை தலையில் 3 முறை அடைத்துள்ளார்.
இதில் மணிமேகலை பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் பின்னர் அங்கிருந்து பாலாஜி தனது இருசக்கர வாகனத்தில் பட்டணம் அருகே உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் 1 லிட்டர் பெட்ரோல் வாங்கிக்கொண்டு மணிமேகலை உடல் முழுவதும் ஊற்றி பற்றவைத்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
பின்னர் மறுநாள் காலையில் மாடு மேய்ப்பதற்காக சென்ற நபர் சடலத்தை கண்டு ராசிபுரம் காவல்துறையினர்க்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் தொடர்பாக ராசிபுரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் பாலாஜி கொலை செய்துவிட்டு சேலம் சென்று விட்டு மீண்டும் பணம் இல்லாத காரணத்தால் தனது தாய் தந்தையிடம் பணம் வாங்குவதற்காக ஊருக்கு வந்துள்ளார்.
அப்போது காவல்துறையினருக்கு வந்த ரகசிய தகவலின் பெயரில் பட்டணம் பிள்ளையார் கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த பாலாஜியை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டதில் பாலாஜி கொலை சம்பவத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து கொலை சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட கல் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்து நீதி மன்ற காவலுக்கு அனுப்பி வைத்து சிறையில் அடைத்தனர். 24 மணி நேரத்தில் குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
அஜித்தும் கார் ரேஸும் அஜித்குமார் சினிமாவுக்கு நடிக்க வந்ததற்கு காரணமே அதில் வரும் பணத்தை வைத்து கார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்குத்தான்…
பிரியாங்காவுக்கு நடந்த 2வது திருமணம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் திருமணம் செய்த வசி சாச்சி குறித்து பல…
சச்சின் ரீரிலீஸ் விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்து மாஸ் ஹிட் அடித்த “சச்சின்” திரைப்படம் கடந்த 18…
90களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை சிம்ரன். இடையழகி என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட சிம்ரன், நடிப்பு திறமையால உச்சகட்ட நடிகையானார்.…
கோவை மாநகராட்சிக்கு சொந்தமான வெள்ளலூரில் 650 ஏக்கர் பரப்பளவு கொண்ட குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பை கிடங்கில் 253…
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
This website uses cookies.