21 வயது இளைஞருடன் உல்லாசமாக இருக்க தாய் செய்த கொடூர செயல் : நள்ளிரவில் தோட்டத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
2 December 2022, 6:19 pm

நிலக்கோட்டை அருகே பச்சிளங்குழந்தை மர்ம சாவுவில் திடீர் திருப்பமாக தாய் உட்பட கள்ளக்காதலை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த சிலுக்குவார்பட்டியில் தோட்டத்தில் தங்கி வேலை செய்துவருபவர் பாலு (42) அவரது அக்கா மகள் துர்காதேவி(21).

இவர் எரியோடு பகுதியைச் சேர்ந்த ராஜதுரை(31) என்பவரை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.

இவர்களுக்கு ஒன்றை வயதில் ரித்திக்கா என்ற ஒன்றரை வயது பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த ஓராண்டு ஆண்டுக்கு முன் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 26-ம் தேதி துர்காதேவி நிலக்கோட்டை அருகே உள்ள தனது தாய்மாமா பாலுவின் தோட்டத்திற்கு துர்காதேவி அவரது ஒன்றரை வயதி குழந்தையுடன் வந்து தங்கியதாக கூறப்படுகிறது.

அன்று இரவு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென்று காணாமல் போய்விட்டதாகவும், காணாமல் போன குழந்தையை இரவு முழுவதும் தேடியும் கிடைக்காமலிருக்கவே மறுநாள் காலை குழந்தை, தோட்டத்து வீட்டின் அருகேயுள்ள கிணற்றில் பிணமாக மிதந்ததைக் கண்டு அக்கம்பக்த்தினர் உடனடியாக நிலக்கோட்டை தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் குழந்தை ரித்திக்காவின் உடலை மீட்டு நிலக்கோட்டை காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இத்தகவல் அறிந்த நிலக்கோட்டை காவல்துறையினர், நேரில் சென்று குழந்தையின் உடலை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விட்டு கிராம நிர்வாக அலுவலர் புகாரின் அடிப்படையில் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து ,குழந்தை தானாக தவறி விழுந்து உயிரிழந்ததா அல்லது வேறு ஏதும் காரணமா என தீவிர விசாரணை செய்தனர்.

இந்த நிலையில் திடீர் திருப்பமாக தாய் துர்கா தேவிக்கும் நிலக்கோட்டையை அடுத்த தோப்புபட்டியை சேர்ந்த அஜய் (வயது 21) என்ற வாலிபருடன் கள்ளதொடர்பு இருந்து வந்தததும் சம்பவத்தன்று இரவு அஜையும் துர்கா தேவியும் உல்லாசமாக இருக்க காட்டுப்பகுதிக்கு சென்றபோது,குழந்தை ரித்திக்காவை அஜாக்கிரதையாக கிணற்றின் அருகே இறக்கிவிட்டு சென்றதால் கிணற்றில் தவறி விழுந்த குழந்தை உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.

இதனை அடுத்து தாய் துர்காதேவி மற்றும் கள்ள காதலன் அஜய் இருவரையும் கைது செய்த நிலக்கோட்டை காவல் ஆய்வாளர் பேபி மற்றும் சார்பு ஆய்வாளர்கள் பாலமுத்தையா, ரவி ஆகியோர் இருவரையும் கைது செய்து நிலக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்,இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 589

    0

    0