மாயமான நெசவு தொழிலாளி கொலை வழக்கில் திடீர் திருப்பம்… கள்ளக்காதலனுடன் சிக்கிய மனைவி… விசாரணையில் பகீர்..!!

Author: Babu Lakshmanan
31 January 2024, 1:34 pm

திருவள்ளூர் ; கும்மிடிப்பூண்டி அருகே மாயமான நெசவு தொழிலாளி கொலை வழக்கில் புதிய திருப்பமாக, மனைவியும், அவரது கள்ளக்காதலனும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு பாலசுப்பிரமணி (வயது 43) என்ற நெசவுத் தொழிலாளி மாயமானதாக அவரது மனைவி புவனேஸ்வரி (வயது 38) என்பவர் பாதிரிவேடு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த பாதிரிவேடு போலீசார், உறவினர்களின் உதவியுடன் மாயமான நெசவுத் தொழிலாளி பாலசுப்பிரமணியை தேடி வந்த நிலையில், அவரது ஹெல்மெட் மற்றும் உடமைகள் வீட்டின் அருகே உள்ள சின்னெரி குளம் ஏரி அருகே இருப்பதாக தகவல் கிடைத்தது.

அதன்பெயரில், ஏரியை சுற்றி தேடியபோது, ஏரியின் பின்புறம் கரையை ஒட்டி பள்ளம் தோண்டப்பட்ட தடயம் இருப்பதை கண்ட போலீசார், வருவாய்த் துறை அதிகாரிகள் முன்னிலையில் பள்ளத்தை தோண்டினர். அதில் பாலசுப்பிரமணி ரத்த வெள்ளத்தில் கைகள் உடைக்கப்பட்டு தலை, வயிறு உள்ளிட்ட பகுதிகளில் வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தொடர்ந்து, பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் காணாமல் போனதாக பதிவு செய்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்தனர்.

அதன் பின்னர் விசாரணையில் இறங்கிய தனிப்படை போலீசார் கொலை செய்யப்பட்ட சுப்பிரமணியின் மனைவி புவனேஸ்வரி மீது சந்தேகம் அடைந்து விசாரணையில் ஈடுபட்டனர்.

தான் யாரிடமும் பேசுவதற்கு கூட செல்போன் இல்லை என் மீது சந்தேகப்பட வேண்டாம் என புவனேஸ்வரி நாடகம் ஆட, ஒரு கட்டத்தில் போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில், புவனேஸ்வரியிடம் செல்போன் இருப்பது உறுதியானது. இதைத் தொடர்ந்து, புவனேஸ்வர்யிடமிருந்த செல்போனின் அழைப்புகளைக் கொண்டு விசாரணையில் இறங்கிய போலீசார் புவனேஸ்வரியின் கள்ளக்காதலன் அதே பகுதியைச் சேர்ந்த முத்தும் ஜெயம் (45) என்பவரை கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், பாலசுப்பிரமணியன் மனைவி புவனேஸ்வரிக்கும், தனக்கும் உல்லாசத்திற்கு இடையூறாக இருந்ததால் கள்ளக்காதலி புவனேஸ்வரியின் கணவன் பாலசுப்பிரமணியை கூலிப்படையை வைத்து, இரவோடு இரவாக கொலை செய்து விட்டு பாலசுப்பிரமணியின் உடலை அருகாமையில் உள்ள ஏரி கரையில் புதைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, கொலைக்கு காரணமான பாலசுப்பிரமணியின் மனைவி புவனேஸ்வரி, கள்ளக்காதலன் முத்து ஜெயம் மற்றும் சம்பவத்தில் ஈடுபட்ட பாதிரி வேட்டை சேர்ந்த ஹேமநாத் (22), இன்பராஜ் (22), என்.எஸ் நகரைச் சார்ந்த சுரேந்தர் (22) உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தலைமறைவான கூலிப்படையின் தலைவன் பாதிரிவேட்டைச் சேர்ந்த கெத்து பிரபு என்கிற பிரபு (30), சூர்யா (26) மாநல்லூரைச் சேர்ந்த அஜய் (23) பாலாஜி (23) ஆகியோரை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். தனது உல்லாசத்திற்காக கட்டிய கணவனையே கள்ளக்காதலுடன் இணைந்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

  • Director Rv Udayakumar Talked About Vijay Politics Entryஇது மட்டும் இல்லைனா விஜய் கட்சியே ஆரம்பித்திருக்க முடியாது : புயலை கிளப்பிய இயக்குநர்!