திருமணமான இளம்பெண்ணை அடிக்கடி ரகசியமாக சந்தித்த இளைஞர்.. நடுரோட்டில் நடந்த பயங்கரம்!
Author: Udayachandran RadhaKrishnan27 November 2024, 12:12 pm
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள கிரிசெட்டிப்பள்ளி கிராமத்தை சேர்ந்த அப்பைய்யா என்பவரது மகன் முருகேஷ் (28) இவர் டெம்போ ஓட்டுனராக வேலை பார்த்து வந்தார்.
அதே கிராமத்தை சேர்ந்த நஞ்சுண்டப்பா என்பவரது மகன் நரசிம்மன் (30) இவர் எலக்ட்டிரிசியன் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பாரதி (25) என்பருக்கும், டெம்போ ஓட்டுனர் முருகேஷூக்கும் கள்ள தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த நரசிம்மன் இருவரையும் கண்டித்துள்ளார். மேலும் கள்ள தொடர்பை விட்டு விடும்படியும் கூறியுள்ளார். ஆனால் முருகேஷ் கள்ள தொடர்பை தொடர்ந்துள்ளார். இதனால் அவர் மீது நரசிம்மன் கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.
இதையும் படியுங்க: நவ.,28 முதல் திராவிட கூட்டத்திற்கு ரெட் அலர்ட் : பாஜக சுவரொட்டியால் பரபரப்பு!
இந்த நிலையில் நேற்று மாலை முருகேஷ் கிரிசெட்டிப்பள்ளி கிராமத்தில் சாலையில் நடந்து சென்றபோது நரசிம்மன் அவரை பின்தொடர்ந்து சென்று அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் நரசிம்மன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து முருகேஷின் தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த முருகேஷ் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து அறிந்த தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி ஆனந்தராஜ் மற்றும் கெலமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொலை குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை செய்து விட்டு தப்பி ஓடிய நரசிம்மனை போலீசார் வலைவீசி தேடிவந்த நிலையில் அவரை பிடித்து கைது செய்தனர். இந்த கொலை குறித்து கெலமங்கலம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.