தெலங்கானா மாநிலம் மஹபூபாபாத் நகரில் சிக்னல் காலனியில் ராமுலு – லட்சுமி தம்பதி மகன் கோபி, மகள் துர்கா, மருமகன் மஹேந்தர் ஆகியோர் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
இந்த குடும்பத்தினர் மஹபூபாபாத் நகரில் காகிதங்களை சேகரித்து அதனை விற்று குடும்பம் நடத்தி வந்தனர். இந்த சூழலில் கோபி சில மாதங்களுக்கு முன்பு பையாரம் மண்டலத்தில் உள்ள லட்சுமிநரசிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த நாகமணியை (35) சந்தித்தார்.
நாகமணி ஏற்கனவே திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். இருப்பினும், நாகமணி அவர்களை விட்டுவிட்டு கோபியுடன் வந்துவிட்டார்.
இதையும் படியுங்க: பிரபல நட்சத்திர ஓட்டலில் விபச்சாரம்… இளம்பெண் நடத்திய பாலியல் தொழில் : காஞ்சியில் ஷாக்!!
இந்நிலையில் நாகமணி – கோபி இடையே சில நாட்களாக சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த சண்டையால் கோபி தாய் லட்சுமி தந்தை ராமுலு மற்றும் தங்கை துர்கா, மாப்பிள்ளை மஹாந்தர் ஆகியோருடன் சேர்ந்து பத்து நாட்களுக்கு முன்பு நாகமணியை அடித்து கொலை செய்தனர்.
கொலைக்கு பின்னர் நாகமணி சடலத்தை வாடகை வீட்டின் வளாகத்தில் புதைத்தனர். இதை தெரியாமல் இருக்க புதைக்கப்பட்ட அதே இடத்தில் மாட்டு சாணத்தைக் பூசி அடுப்பு வைத்து சமைத்தார்கள்.
இந்நிலையில் நாகமணி புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து துர்நாற்றம் வீசியதோடு தெரு நாய்கள் அந்த பகுதியை சுற்றி சுற்றி வந்தது. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் நாகமணியும் சில நாட்களாக காணாமல் போனதால் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இன்ஸ்பெக்டர் தேவேந்தர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டின் வளாகத்தை ஆய்வு செய்தனர். நாகமணி கொல்லப்பட்டு வீட்டின் வளாகத்தில் புதைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் துர்நாற்றம் வந்த பகுதியில் தோண்டி பார்த்தபோது இறந்த உடல் மீட்கப்பட்டது. இதனையடுத்து மஹபூபாபாத் எஸ்.பி. சுதிர் ராம்நாத் சம்பவ இடத்தை ஆய்வு செய்து தடவியியல் குழுவினர் வரவழைத்து தடயங்களை சேகரித்தனர்.
முன்கூட்டியே போலீசார் வருவதை அறிந்த கோபி மற்றும் அவரது குடும்பத்தினர் தலைமறைவான நிலையில் அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.