பண்ணை வீட்டில் மெகா சூதாட்டம்… அலறியடித்து ஓட்டம்… எகிறி பிடித்த போலீஸ் ; திமுக பிரமுகர்கள் உள்பட 18 பேர் கைது
Author: Babu Lakshmanan21 September 2022, 10:12 pm
ஈரோடு அருகே பண்ணை வீட்டில் சட்டவிரோதமாக மெகா சூதாட்டத்தில் ஈடுபட்ட திமுக பிரமுகர் உள்பட 18 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் வழக்கம் போல கருங்கல்பாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சாய்குரு நகரில் உள்ள பண்ணை வீட்டில் மெகா சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, எந்தவித முன்னறிவுப்புமின்றி அந்தப் பண்ணை வீட்டிற்குள் போலீசார் நுழைந்தனர். அப்போது, போலீசாரை பார்த்தவுடன், அங்கிருந்த கும்பல் நாலாபுறம் ஓட முயற்சித்தனர். போலீசார் அனைவரையும் மடக்கிப்பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

விசாரணைக்கு பிறகு சூதாட்டத்தில் ஈடுபட்ட திமுக பிரமுகர்கள் அலாவுதீன், சின்னதுரை உட்பட 18 பேரை போலீசார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, சீட்டு கட்டுகள், 3 லட்சத்து 16 ஆயிரம் ரொக்கம், 4 சொகுசு கார்கள், 3 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.