திண்டுக்கல் அருகே பழனி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இரண்டு போலி மதுபானக்கூடத்தில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெறுவதை அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
திண்டுக்கல் – பழனி தேசிய நெடுஞ்சாலையில் பள்ளப்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட இரு வேறு இடங்களில் 1.மதுரை செல்லும் வழியில் அனுமதியின்றி போலி மதுபானக்கூடம் ஒன்றும் , 2.பழனி செல்லும் சாலையில் போலி மதுபான கூடம் ஒன்றும் இயங்கி வருகிறது.
தேசிய நெடுஞ்சாலைகளில் அரசு மதுபானக்கூடங்கள் மற்றும் அரசு மது கடைகள் இயங்குவதற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், இங்கு போலி மதுக்கள் விற்பனை செய்வதற்காக அனுமதி இல்லாமல் மதுக்கூடங்கள் நடைபெற்று வருகிறது. மேலும், அரசு மதுபான கடை இல்லாத பகுதிகளில் சட்ட விரோதமாக கள்ளச் சந்தையில் 24 மணி நேரமும் மதுபான விற்பனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதனை காவல்துறையினர் மற்றும் மதுவிலக்கு துறை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தற்பொழுது விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 13 நபர்கள் உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து உயரும் நிலையில், திண்டுக்கல்லில் நடைபெறும் போலி சந்தை மது விற்பனையை அதிகாரிகள் உடனடியாக தடுத்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
திமுகவில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் மீது ஏராளமான சர்ச்சைகள் உள்ளது. இவர் பேசும் பேச்சு எப்போதும் சர்ச்சையை…
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
This website uses cookies.